ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா?

ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா?

ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா?

அஜ்மல் கான்

பதில் 

பொதுவாக தொழுகைகளை அதற்கான நேரம் வருவதற்கு முன் தொழக் கூடாது என்றாலும் தொழுகை நேரம் வருவதற்கு முன் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் நேரம் வருவதற்கு முன்னர் தொழ அனுமதியுள்ளது.

பயண நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைகறைப் பொழுது வருவதற்கு முன்பே இருட்டில் தொழுதுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

371حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا خَيْبَرَ فَصَلَّيْنَا عِنْدَهَا صَلَاةَ الْغَدَاةِ بِغَلَسٍ فَرَكِبَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் மீது (ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு) போர் தொடுத்தார்கள். (அந்தப் போரின் போது) கைபருக்கு அருகில் (அதன் புறநகரில்) நாங்கள் (கடைசி இரவின்) இருட்டிலேயே  வைகறைத் தொழுகையைத் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள்.

நூல் : புகாரி 371

2270 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ عُمَارَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةً إِلَّا لِمِيقَاتِهَا إِلَّا صَلَاتَيْنِ صَلَاةَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ وَصَلَّى الْفَجْرَ يَوْمَئِذٍ قَبْلَ مِيقَاتِهَا و حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ جَرِيرٍ عَنْ الْأَعْمَشِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ قَبْلَ وَقْتِهَا بِغَلَسٍ رواه مسلم

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தில்) எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று: முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும், இஷாவையும் (சேர்த்துத்) தொழுதது. மற்றொன்று: அன்றைய (மறு) நாள் ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே (முஸ்தலிஃபாவில்) தொழுதது.

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய நேரத்திற்கு முன் இருட்டிலேயே தொழுதது'' என இடம்பெற்றுள்ளது.

நூல் : முஸ்லிம் 2479

எனவே ஃபஜர் தொழுகையைச் சற்று முன்னதாகவே இருளில் தொழுவதற்கு அனுமதியுள்ளது. குறிப்பாக பயணத்தில் இவ்வாறு தொழுதால் அதில் தவறேதுமில்லை.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit