தடை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா?

தடை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா?

டை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா?

ஷரஃபுத்தீன்

பதில்:

குறிப்பிட்ட மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவர் தானாக விரும்பித் தொழும் நஃபிலான வணக்கங்களுக்கே இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காரணங்களுக்காக சில தொழுகைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை இந்தத் தொழுகைகளுக்கு உரியதல்ல. இத்தொழுகைகள் நேரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக காரணத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

உதாரணமாக ஜனாஸாத் தொழுகை, கிரகணத் தொழுகை ஆகியவற்றை இந்த மூன்று நேரங்கள் உட்பட எந்த நேரங்களில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இது பற்றி ஏற்னனவே விரிவாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் காணிக்கைத் தொழுகையைப் பொறுத்தவரை இத்தொழுகையை பள்ளிக்குள் நுழைந்தால் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

صحيح البخاري

444 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.

அறிவிப்பவர் : அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி)

நூல் : புகாரி 444

எனவே பள்ளிக்குள் எந்த நேரத்தில் நுழைந்தாலும் இத்தொழுகையைத் தொழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன