மூன்றுபேர் ஜமாஅத்தாகத் தொழும் போது எவ்வாறு அணிவகுக்க வேண்டும்?

மூன்றுபேர் ஜமாஅத்தாகத் தொழும் போது எவ்வாறு அணிவகுக்க வேண்டும்?

யூசுஃப் அமானுல்லாஹ்

பதில்:

இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்பற்றித் தொழுதால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

539حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ وَيَحْيَى بْنُ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ قَالُوا حَدَّثَنَا حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ أَتَيْنَا جَابِرًا يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ قَالَ سِرْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ فَقَامَ يُصَلِّي وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ذَهَبْتُ أُخَالِفُ بَيْنَ طَرَفَيْهَا فَلَمْ تَبْلُغْ لِي وَكَانَتْ لَهَا ذَبَاذِبُ فَنَكَّسْتُهَا ثُمَّ خَالَفْتُ بَيْنَ طَرَفَيْهَا ثُمَّ تَوَاقَصْتُ عَلَيْهَا لَا تَسْقُطُ ثُمَّ جِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ فَجَاءَ ابْنُ صَخْرٍ حَتَّى قَامَ عَنْ يَسَارِهِ فَأَخَذَنَا بِيَدَيْهِ جَمِيعًا حَتَّى أَقَامَنَا خَلْفَهُ قَالَ وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُنِي وَأَنَا لَا أَشْعُرُ ثُمَّ فَطِنْتُ بِهِ فَأَشَارَ إِلَيَّ أَنْ أَتَّزِرَ بِهَا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا جَابِرُ قَالَ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا كَانَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ وَإِذَا كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حِقْوِكَ رواه أبو داود

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் ஒரு போருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப் பிடித்து எங்களை அவர்களுக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள்.

நூல்கள் : அபூதாவூத் 539, முஸ்லிம் 5328

Leave a Reply