தஜ்ஜால் பெயரைச் சொன்னால்?

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்?

ஜ்ஜால் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான். அவனுடைய பெயரை யாராவது சொன்னால் அந்தக் கட்டு அவிழ்க்கப்படும். அவனுடைய பெயரை எழுதினால் அவிழ்க்கப்படாது என்று கூறும் ஹதீஸ் இருக்கின்றதா?

அப்பாஸ்

பதில்:

நீங்கள் கூறியது போல் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்படவில்லை. இது பொய்யான கட்டுக்கதையாகவே உள்ளது.

இந்தக் கதையை மேலோட்டமாகப் பார்த்தாலே இது பொய் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். தஜ்ஜால் என்ற பெயரைச் சொன்னால் தஜ்ஜால் கட்டிலிருந்து அவிழ்க்கப்படுகிறான் என்று இந்தக் கதை கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்கள் பல முறை மக்களுக்கு தஜ்ஜால் குறித்து பேசியுள்ளார்கள். அவனுடைய பெயரை உச்சரித்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு முன்னால் வந்த அனைத்து நபிமார்களும் தஜ்ஜால் குறித்து தமது சமுதாயத்தார்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

இவர்கள் தஜ்ஜால் என்ற பெயரைக் கூறியதால் தஜ்ஜால் கட்டிலிருந்து விடுபட்டு வரவில்லை. ஏன் இப்போது நாம் தஜ்ஜால் என்ற பெயரைக் கூறுவோம். உடனே தஜ்ஜால் நமக்கு முன்னால் வந்து விடுவானா? இன்றைக்கும் எத்தனையோ பேர் தஜ்ஜால் என்ற வார்த்தையைக் கூறிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் தஜ்ஜால் வரவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத பொய்யான செய்தி.

Leave a Reply