ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

னாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

அக்பர் மைதீன்.

பதில்:

ஜனாஸாத் தொழுகையில் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும்.

السنن الكبرى للبيهقي  – كتاب الجنائز

 وأخبرنا أبو حامد أحمد بن علي الرازي الحافظ ، أنبأ زاهر بن أحمد ، ثنا أبو بكر بن زياد النيسابوري ، ثنا أحمد بن سعد الزهري ، ثنا سعيد بن حفص ، ثنا موسى بن أعين ، عن خالد بن يزيد أبي عبد الرحمن ، عن زيد بن أبي أنيسة ، عن حماد ، عن إبراهيم ، عن علقمة ، والأسود ، عن عبد الله ، قال : " ثلاث خلال كان رسول الله صلى الله عليه وسلم يفعلهن ، تركهن الناس , إحداهن : التسليم على الجنازة مثل التسليم في الصلاة "

மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ

கடமையான தொழுகையில் இரண்டு ஸலாம் சொல்லப்படுவது போல் ஜனாஸாத் தொழுகையிலும் இரண்டு ஸலாம் கொடுக்கலாம் என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது.

المستدرك على الصحيحين للحاكم (1/ 513)

1332 – حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي دَارِمٍ الْحَافِظُ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ غَنَّامِ بْنِ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْعَنْبَسِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا، وَسَلَّمَ تَسْلِيمَةً التَّسْلِيمَةُ الْوَاحِدَةُ عَلَى الْجِنَازَةِ»

கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்துல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் என்று அறியப்படாதவர்கள் என்பதால் இது ஆதாரமாகக் கொள்ளத்தக்கது அல்ல.

المستدرك على الصحيحين للحاكم  – كتاب الجنائز

 أخبرنا إسماعيل بن أحمد التاجر ، ثنا محمد بن الحسين العسقلاني ، ثنا حرملة بن يحيى ، ثنا ابن وهب ، أخبرني يونس ، عن ابن شهاب ، قال : أخبرني أبو أمامة بن سهل بن حنيف ، وكان من كبراء الأنصار وعلمائهم ، وأبناء الذين شهدوا بدرا مع رسول الله صلى الله عليه وسلم أخبره رجال من أصحاب رسول الله صلى الله عليه وسلم في الصلاة على الجنازة ، " أن يكبر الإمام ، ثم يصلي على النبي صلى الله عليه وسلم ، ويخلص الصلاة في التكبيرات الثلاث ، ثم يسلم تسليما خفيا حين ينصرف ، والسنة أن يفعل من ورائه مثل ما فعل أمامه " قال الزهري : حدثني بذلك أبو أمامة ، وابن المسيب يسمع فلم ينكر ذلك عليه قال ابن شهاب : فذكرت الذي أخبرني أبو أمامة من السنة في الصلاة على الميت لمحمد بن سويد ، قال : وأنا سمعت الضحاك بن قيس يحدث ، عن حبيب بن مسلمة في صلاة صلاها على الميت مثل الذي حدثنا أبو أمامة " هذا حديث صحيح على شرط الشيخين ، ولم يخرجاه ، وليس في التسليمة الواحدة على الجنازة أصح منه ، وشاهده حديث أبي العنبس سعيد بن كثير*

ஜனாஸாத் தொழுகையில் இமாம் தக்பீர் கூற வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துக் கூற வேண்டும். பிறகு (தொழுகையை) நிறைவுசெய்யும் போது மெதுவாக ஒரு சலாம் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் சொன்னதாக அபூஉமாமா அறிவிக்கிறார். இமாம் செய்வது போல் பின்பற்றுபவரும் செய்வது நபிவழியாகும் எனவும் கூறுகிறார்.

அறிவிப்பவர் : ஹுபைப் பின் மஸ்லமா (ரலி)

நூல் : ஹாகிம் 1264

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுப்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்களில் இதுதான் மிகச் சரியானது என்று அந்தக் கருத்துடையவர்கள் கூறுகின்றனர். இது ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறப்படவில்லை. நபித்தோழர்கள் கூற்றாகவே இது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது மார்க்க ஆதாரமாகாது.

ஜனாஸாத் தொழுகையில் மற்ற தொழுகைகள் போல் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும். ஒரு ஸலாம் கொடுப்பதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லை.