நிர்வாணமாகக் குளிக்கலாமா?

நிர்வாணமாகக் குளிக்கலாமா?

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாத நிலையில் தனியறையில் நிர்வாணமாகக் குளிக்கும் போது உளூச் செய்தால் அந்த உளூ கூடுமா?

என்.எம். ஹைதர் அலீ, சென்னை.

பதில்:

سنن أبي داود ت الأرنؤوط (6/ 134)

4017 – حدَّثنا عبدُ الله بنُ مسلمةَ، حدَّثنا أبي، وحدَّثنا ابنُ بشارٍ، حدَّثنا يحيى -نحوه- عن بَهْز بن حَكِيم، عن أبيه عن جدِّهِ، قال: قلتُ: يا رسولَ الله – صلَّى الله عليه وسلم -، عوراتُنا ما نأتي منها وما نذرُ؟ قال: "احفظ عورتكَ إلا من زوجتِكَ أو ما ملكت يَمِينُكَ" قال: قلتُ: يا رسولَ الله، إذا كان القومُ بعضُهم في بعضٍ، قال: "إن استطعتَ أن لا يرينَّها أحدٌ فلا يرينَّها" قال: قلتُ: يا رسول الله إذا كان أحدُنَا خالياً، قال: "اللهُ أحق أن يُسْتَحيا مِنَ الناسِ"

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உன்னுடைய மனைவி, உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள் என்று சொன்னார்கள். ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள் என்றார்கள். ஒருவர் தனியாக இருக்கும் போது? என்று நான் கேட்டதற்கு, அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல் : அபூதாவூத்

இந்த ஹதீஸின் அடிப்படையில் தனியறையில் யாருமே பார்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் உளூ நிறைவேறுவதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

24.12.2014. 21:09 PM

Leave a Reply