மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா? தொடர் 1

ரணித்தவர்கள் குறித்து முஸ்லிம் சமுதாயத்திலும், முஸ்லிமல்லாத மக்களிடமும் தவறான மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன.

உயிருடன் வாழும்போது மனிதனுக்கு இருந்த அனைத்து ஆற்றலும் அற்றுப் போவதைக் கண்ணால் கண்ட பின்பும் மரணித்தவர்களின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஏறுக்குமாறாக நம்புகின்றனர்.

ஒருவன் உயிருடன் இருக்கும் போது அவனுக்கு அருகில் நின்று  அழைத்தால் தான் செவியுறுவான் என்று நம்பும் மக்கள், அவன் மரணித்த பின்னர் எவ்வளவு தொலைவில் இருந்து அழைத்தாலும் அவன் செவியுறுவான் என்று நம்புகின்றனர்.

உயிருடன் இருக்கும் போது தனது தேவைக்காக பிள்ளைகளைச் சார்ந்து இருந்தவன், மரணித்து விட்டால் குடும்பத்துக்கு உதவும் அளவுக்கு மகா சக்தி பெற்றுவிட்டதாகக் கருதுகின்றனர்.

நல்லவர்கள், ஞானிகள் என்று அறியப்பட்டவர்களாக இருந்தால் வாழும் போது அவர்கள் ஒரு மொழியை மட்டுமே அறிவார்கள். ஆனால் மரணித்த பின்னர் உலகின் பல பாகங்களில் இருந்தும் பல மொழிகளிலும் அவரை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். செத்த பின்னர் அனைத்து மொழிகளும் அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது என்று நம்புகின்றனர்.

உயிருடன் வாழும் போது அவருக்கே பிள்ளை இல்லாவிட்டாலும் செத்த பின்னர் மற்றவர்களுக்குப் பிள்ளை வரம் கொடுக்கும் ஆற்றல் வந்து விடுகிறது எனக் கருதுகின்றனர்.

உலகில் வாழும் போது சீடர்கள் போடும் பிச்சையில் வாழ்க்கை நடத்தியவர்கள், செத்த பின்னர் தமது சீடர்களைச் செல்வந்தராக்க வல்லவர்கள் என்று நினைக்கின்றனர்.

பிற மதத்தவர்கள் இப்படி நம்பினால் அதில் ஆச்சரியம் இல்லை. மரணித்த பின்னர் மனிதனின் நிலை என்ன என்று தெளிவாக விளக்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்களும் இப்படி நம்புவதுதான் வியப்பாக உள்ளது.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலில் அவர்கள் இறங்குவதற்கும் இந்த நம்பிக்கையே காரணமாக உள்ளது.

மரணித்த மனிதனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதையும், மரணித்தவர்களுக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் விளக்கி இணைகற்பிக்கும் மாபாதகச் செயலில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்.

இது குறித்த ஆதாரங்கள் அடுத்த ஆக்கத்தில் காணலாம்.

Leave a Reply