விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை!

ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!

பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இதுதான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் பகிரங்கமாக அழைத்திருந்தனர். அந்த அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டவுடன் விவாதம் செய்வதில் இருந்து பின் வாங்கி விட்டனர்.  பகிரங்கமாக இதை தங்கள் இணைய தளத்திலும் பின்வருமாறு அறிவித்துள்ளனர்.

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடி விவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.

– Hijra Committee (Yervadi) – 29 March, 2011

இன்றைய தினம் (மார்ச் 29) இவ்வாறு அறிவித்தவர்கள் இதற்கு முன் என்ன சொன்னார்கள் என்பதையும் அதற்கு நாம் அளித்த பதில் என்ன என்பதையும் நேயர்களின் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு!

டி.என்.டி.ஜே யையும், ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது.

நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.

– ஹிஜ்ரா கமிட்டி – ஜூலை, 2010

இதற்கு பிஜே (TNTJ ) வின் பதில் :

பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும்.

மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்று ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.

மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஓடி ஒளியும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை.

கீழ்க்கண்டவாறு அவர்கள் தெளிவு பட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

எங்களுக்கும், உங்களுக்கும் இடையே முரண்பாகவுள்ள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும், மேலும் நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்!

மேற்கண்டவாறு எழுதி

விவாதக் குழுத் தலைவர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

30 அரண்மனைக்காரன் தெரு,

மண்ணடி சென்னை-1

என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்!

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன் September 20 , 2010

அதன் பிறகு, இவர்கள் முறையான பதிலைச் சொல்லி, முறைப்படி விவாதத்திற்கு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் பல சாக்கு போக்குகள் சொல்லி காலம் கடத்தி வந்தார்கள். பல சகோதரர்கள் இது குறித்து கேள்விகள் பல எழுப்பிய போதும், மழுப்பலான பதிலைத் தந்து காலம் கடத்துவதிலேயே தான் குறியாக இருந்து வந்தார்கள் இந்த ஹிஜ்ரா கமிட்டியினர்.

கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ்.

இப்படிக்கு

தள நிர்வாகி July 15, 2010

பி.ஜேயும், எஸ்.கேயும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி

:[email protected] (August 14 2010

உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும்.

மற்றவை பின்

admin

jaqh.net September 20 2010

இன்ஷா அல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

இப்படிக்கு

நிர்வாகி September 22 2010 

பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே?

நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும்.

இப்படிக்கு

தள நிர்வாகி September 23 2010

நாஷித் போன்றவர்களுக்கு இந்த விவாத ஒப்பந்தத்தில் எந்தப் பங்கும் கிடையாது. அதனால் விவாதக்குழு என்றெல்லாம் பதிந்து மக்களை திசை திருப்புவதை விட்டுவிட்டு, பி.ஜே யின் கொள்கையை மட்டுமாவது இணையத்தில் ஒழுங்காக பிரச்சாரம் செய்து வந்தால் சரி. மேலும் யாருடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமோ அதை நாங்கள் நன்கறிவோம். ஆகவே சம்மந்தமில்லாத உங்களைப் போன்றவர்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்து நலம்.

நிர்வாகி January 22 , 2011

விவாதம் அல்லாஹ் நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

இப்படிக்கு

நிர்வாகி January 22 , 2011

விவாத சவடாலை மெய்ப்படுத்துங்கள், ஏன் தாமதிக்கிறீர்கள்? என்று பல சகோதரர்கள் கேட்டுக்கொண்டபோது இவர்கள் தங்கள் இணையதளத்தில் சொல்லியுள்ள பதில்..

பிஜே உடன் விவாதிக்கப் போகிறார்கள், என்று அவர்களது கொள்கையில் இருப்பவர்கள் கூட மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்து வந்த நிலையில், அவர்களது எதிர்ப்பார்ப்பை "பூர்த்தி" செய்யும் வண்ணம் இவர்கள் விடுத்துள்ள இறுதி அறிக்கை இதோ..

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடி விவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம். 

– Hijra Committee (Yervadi) – 29 March, 2011

அறிந்து கொள்ளுங்கள். இவர்கள் தான் ஏர்வாடி JAQH என்று செயல்படும் ஹிஜ்ரா கமிட்டியினர்  !!

தகவல்

நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646