139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல.

139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல

வ்வசனத்தில் (9:34) பொருளாதாரத்தைத் திரட்டுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வசனம் ஜகாத் எனும் தர்மம் கடமையாக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையெனவும், ஜகாத் கடமையாக்கப்பட்ட பின் பொருளாதாரத்தைத் திரட்டுவோர் அதற்குரிய ஜகாத்தைக் கொடுத்து விட்டால் அவர்கள் மீது மறுமையில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் நபிவழித் தொகுப்புகளில் கூறப்படுகிறது. (பார்க்க: புகாரீ 1404) 

திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் பொருளாதாரத்தைத் திரட்டவும், சேமிக்கவும் தூண்டுகின்றன. இதை 4:29, 4:32, 4:34, 9:103, 16:71, 17:6, 33:27, 62:10, 71:12, 73:20 ஆகிய வசனங்களில் காணலாம்.

Leave a Reply