194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்

194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்

"வர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்'' என்று இவ்வசனங்களில் (8:23, 8:70) கூறப்படுகிறது.

அறிந்திருந்தால் என்று கூறுவதால் அல்லாஹ் அறியாமலும் இருப்பானா என்று கருதக் கூடாது.


ஏனெனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும்போது, அனைத்தையும் அறிந்தவன் எனவும், தனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை எனவும் பல வசனங்களில் குறிப்பிடுகிறான்.

எனவே, அவர்களின் உள்ளத்தில் நன்மை இருப்பதையோ, அல்லது இல்லாததையோ நிச்சயமாக அவன் அறிவான். இந்த இறைப்பண்புக்கு மாற்றமில்லாத வகையில் தான் இவ்விரு வசனங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களது உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதற்கு, "அவர்களின் உள்ளங்களில் நன்மை இருந்திருந்தால்" என்பதே பொருள்.

அவர்கள் உள்ளங்களில் நன்மை இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுக்குத் தெரியும்.

அவர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதாக அல்லாஹ்வுக்குத் தெரியவில்லை என்று கூறினால், அவர்களிடம் நன்மை இல்லை என்பதே பொருள். அதாவது, அவர்களிடம் சிறிதளவாவது நன்மை இருந்திருந்தால் இந்தச் சத்தியக் கருத்தை ஏற்றிருப்பார்கள் என்பதையே இவ்வசனம் கூறுகிறது.

Leave a Reply