322. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை மணக்கக் கூடாது

322. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை மணக்கக் கூடாது

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை யாரும் மறுமணம் செய்யக் கூடாது என்று இவ்வசனங்கள் (33:6, 33:53) தடை செய்கின்றன.

பொதுவாக பெண்களின் மறுமணத்தை இஸ்லாம் ஆதரிக்கிறது, ஆர்வமூட்டுகிறது. அவ்வாறிருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு மற்றவர்கள் மணக்கக் கூடாது என்றால் அப்பெண்களின் மறுமண உரிமையை இது பறிப்பதில்லையா? என்று சிலர் கேட்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியராக இருப்பவர்கள் மற்ற பெண்களைப் போல் இருக்கக் கூடாது. அவர்களுக்கு மற்றவர்களை விட கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளன என்று கூறிவிட்டு கூடுதல் கட்டுப்பாடு வேண்டாம் என்று நீங்கள் கருதினால் இப்போதே நீங்கள் பிரிந்து செல்லலாம் என்று 33:28 வசனத்தில் அல்லாஹ் கூறச்சொல்கிறான்.

கூடுதல் கட்டுப்பாட்டுக்கு அனைவரும் தாங்களாகவே விரும்பி உடன்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் மனைவியராகவே இருந்தால் தமக்கு மறுமணம் செய்யும் வாய்ப்பு இருக்காது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டே தான் அப்பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியராக வாழ்க்கை நடத்தச் சம்மதித்தார்கள் என்பதால் அப்பெண்களின் மறுமண உரிமையை இது பறிப்பதாக ஆகாது.

Leave a Reply