506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்?

506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்?

வ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.

இவ்வசனங்களில் (19:67, 76:1) முன்னர் எந்தப் பொருளாகவும் மனிதன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வசனங்களில் (21:30, 25:54, 32:8, 76:2, 86:6) தண்ணீரால் மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) கருவுற்ற சினைமுட்டையில் இருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வசனங்களில் (3:59, 18:37, 22:5, 30:20, 35:11) மண்ணால் உங்களைப் படைத்தோம் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வசனங்களில் (16:4, 18:37, 22:5, 23:13, 23:14, 35:11, 36:77, 40:67, 53:45, 75:37, 76:2, 80:19) மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி திருக்குர்ஆன் முரண்பட்டுப் பேசுவது ஏன் என்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை. எல்லாமே சரியான கருத்து தான் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இடியாப்பம் எனும் உணவைப் பற்றி பேசும்போது

நெல்லில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.

அரிசியில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.

மாவில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.

அரிசிமாவில் இருந்து தயாரிக்கப்பபட்டது எனவும் கூறலாம்.

தண்ணீர் மற்றும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.

என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்.

இதை முரண்பாடு என்று யாரும் கூற மாட்டார்கள். இதில் எந்த ஒன்றையும் பொய் என்று சொல்ல முடியாது.

அதுபோல் தான் மேற்கண்ட வசனங்கள் மனிதனைப் படைப்பது குறித்து பேசுகிறது.

Leave a Reply