இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன?

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன?

மாம் கடைசி இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா?

எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி.

தொழுகையில் இமாம் என்ன நிலையில் இருக்கின்றாரோ அதே நிலையைத் தான் நமது நிலையாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

سنن أبي داود

وحدثنا أصحابنا، قال: كان الرجلُ إذا جاء يسألُ فيُخبَرُ بما سُبِقَ من صلاته، وإنهم قاموا مع رسولِ الله – صلى الله عليه وسلم -من بين قائمٍ وراكعٍ وقاعدِ ومُصلّ مع رسول الله – صلى الله عليه وسلم – قال ابنُ المثنى: قال عمرو: وحدثني بها حصَين، عن ابن أبي ليلى -حتَّى جاء معاذٌ- قال شعبة: وقد سمعتُها من حُصين -فقال: لا أراه على حالٍ، إلى قوله: "كذلك فافعلوا". ثمَّ رجعتُ إلى حديث عمرو بن مرزوق، قال: فجاء معاذٌ فأشاروا إليه- قال شُعبة: وهذه سمعتُها من حُصَين- قال: فقال مُعاذٌ: لا أراه على حالٍ إلا كنتُ عليها، قال: فقال: "إنَّ معاذاً قد سنَّ لكم سُنَّةً، كذلك فافعلوا".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும் போது தாமதமாக வரும் நபித்தோழர்கள் தொழுகையைத் துவக்கத்தில் இருந்து தொழுவார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் ஒவ்வொருவரும் ஒரு நிலையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது முஆத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) எந்த நிலையில் இருப்பார்களோ அந்த நிலையில் நான் சேர்ந்து கொள்வேன் எனக் கூறி அவ்வாறு செய்யலானார். இதைக் கண்ட நபியவர்கள் முஆத் ஒரு வழிமுறையைக் காட்டித் தந்துள்ளார். அதையே நீங்கள் என் வழிமுறையாக எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். இதை எனக்கு நபித்தோழர்கள் அறிவித்தனர் என்று அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.

நூல் : அபூதாவூத் (சுருக்கம்)

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார் என்பதை வலியுறுத்தும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவையனைத்துமே இமாம் எந்த நிலையில் உள்ளாரோ அதைத் தான் தாமதமாக வருபவரும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியுள்ளன.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit