தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314

இதன் பொருள்:

இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)


வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்

اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ

 அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்[F]ஸீ, வஅந்(த்)த தவப்பா[F]ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா, வஇன் அமத்தஹா ப[F]ஃக்பி[F]ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி[F]யா

என்று ஓத வேண்டும்.

ஆதாரம்: முஸ்லிம் 4887

பொருள் :

இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.


வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.

اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

 அல்லாஹும்ம ரப்ப(B]ஸ் ஸமாவா(த்)தி வரப்ப(B]ல் அர்ளி, வரப்ப(B]ல் அர்ஷில் அளீம்,ரப்ப(B]னா வரப்ப(B] குல்லி ஷையின், பா[F]லி(க்)கல் ஹப்பி(B] வன்னவா, வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீலி வல் பு[F]ர்கான், அவூது பி(B](க்)க மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பி(B]னாஸிய(த்)திஹி, அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ப[F]லைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் ஆஃகிரு ப[F]லைஸ ப(B]ஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ப[F]லைஸ ப[F]வ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பா(B]த்தினு ப[F]லைஸ தூன(க்)க ஷைவுன்,இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ப[F]க்ரி 

ஆதாரம்: முஸ்லிம் 4888

பொருள்:

இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும்,விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக.


படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்

بِاسْمِكَ رَبّ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ

 பி(B]ஸ்மி(க்)க ரப்பீ[B], வளஃது ஜன்பீ(B] வபி(B](க்)க அர்ப[F]வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ர்ஹம்ஹாவஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபா(B]த(க்)கஸ் ஸாலிஹீன். 

ஆதாரம்: புகாரி 5845

பொருள்:

என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!


பி(B]ஸ்மில்லாஹ் எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்

سُبْحَانَكَ اللّهُمَّ رَبّيْ بِكَ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ

ஸுப்(B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ[B], பி(B](க்)க வளஃது ஜன்பீ[B], வபி(B](க்)க அர்ப[F]வுஹு,இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ஃக்பி[F]ர் லஹா, வஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபாத(க்)கஸ் ஸாலிஹீன்.

ஆதாரம்: முஸ்லிம் 4889

பொருள்:

என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!

பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிய துஆக்களின் தொகுப்பு நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

Thoongum pothu othum dua in tamil

Allahumma Bismikka Amoothu Va-Ahya, அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா,  اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

தூங்கும் முன் ஓதும் துஆ

Allahumma Bismikka Amoothu Va-Ahya, அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா,  اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

What is the Dua to read before sleep in Tamil?

Allahumma Bismikka Amoothu Va-Ahya, அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா,  اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

What is the Dua to read before sleep?

Allahumma Bismikka Amoothu Va-Ahya

Leave a Reply