இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா?

இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா?

இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா?

முஹம்மத் ஸபீர்.

பதில் :

பயணத்தில் இருப்பவர்கள் இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். இரண்டு தொழுகைகளை இரண்டாவது தொழுகை நேரத்தில் தொழுவதற்கு ஆதாரம் இருப்பது போல் முதல் தொழுகை நேரத்தில் முற்படுத்தி தொழுவதற்கும் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

499 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: «خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ، فَتَوَضَّأَ، فَصَلَّى بِنَا الظُّهْرَ وَالعَصْرَ، وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ وَالمَرْأَةُ وَالحِمَارُ يَمُرُّونَ مِنْ وَرَائِهَا»

அபூஜுஹைஃபா (ரலி) கூறியதாவது:

நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது உளூ செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. உளூ செய்துவிட்டு எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் (ஜம்வு செய்து) தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. பெண்கள், கழுதைகள் அந்தக் கைத்தடிக்கு அப்பால் சென்று கொண்டிருந்தனர்.

நூல் : புகாரி 499

நண்பகல் என்பது லுஹர் நேரமாகும். அஸர் நேரம் வருவதற்கு முன்பே லுஹரையும், அஸ்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும்.