ஓட்டமெடுத்த ஹிஜ்ரா கமிட்டி

ஓட்டமெடுத்த ஹிஜ்ரா கமிட்டி

மாவாசை தினத்தில் பெருநாள் கொண்டாடி விஞ்ஞான முலாம் பூசி மக்களை ஏமாற்றும் ஹிஜ்ரா கமிட்டி என்ற கும்பல் தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடன் விவாதம் நடத்த பயப்படுவது ஏன்? என்று அப்பாவி மக்கள் மத்தியில் பேசுவதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இது அப்பட்டமான பொய்யாகும். தவ்ஹீத் ஜமாஅத்துடன் நாங்கள் விவாதிக்கத் தயாராக இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து ஓட்டம் எடுத்த கும்பல் தான் ஹிஜ்ரா கமிட்டி என்பதை ஆதாரத்துடன் இங்கே பதிவிடுகிறோம்.

அம்மாவாசையைத் தலைப்பிறை என்று அறிவித்து சில வாதங்களை இவர்கள் தங்களின் இணைய தளத்தில் வெளியிட்டனர். அந்த வாதங்கள் அபத்தமாக இருந்ததால் அது குறித்து நம் மக்கள் பல கேள்விகளைக் கேட்டு எதிர்வாதங்களை முன் வைத்தனர்.

இவற்றுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிய ஹிஜ்ரா கமிட்டி தன்னை நம்பிய ஏமாளிக் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக சில சமாளிப்புகளை முன் வைத்தது.

(நம் சகோதரர்கள் வைத்த வாதங்கள் யாவை என்பது தனியாக வெளியிடப்படும்.)

2010 ஜூலை 15 அன்று இவர்கள் தமது இணைய தளத்தில் போட்ட பதிலைப் பாருங்கள்!

கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ். 

இப்படிக்கு தள நிர்வாகி July 15, 2010

இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன?

நம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கும், வாதங்களுக்கும் பதில் இல்லாததால் பரீசிலித்துப் பின்னர் பதில் தருவோம் என்பது தவிர வேறு அர்த்தம் இல்லை.

ஆதாரம் இல்லாமலும், ஆய்வு செய்யாமலும் தான் இவர்கள் அமாவாசையாக ஆனார்கள் என்பது விளங்குகிறதா?

அறிவித்தபடி பரிசீலித்து நம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்  தந்தார்களா? தரவே இல்லை.

எவ்வளவு நாளில் பதில் தருவீர்கள் என்று நம் மக்கள் நெருக்கடி கொடுத்த போது பின்வரும் பதிலைப் போட்டனர்

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு!

டி.என்.டி.ஜேயையும் ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது. நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத் தயார்.

– ஹிஜ்ரா கமிட்டி – ஜூலை, 2010

நம் மக்களின் கேள்விகளுக்குப் பதில் இல்லாததால் அவர்களைச் சேர்ந்தவர்களே அம்வாவாசை கொள்கையை விட்டு விலக ஆரம்பித்த போது பீஜேயை விவாதத்துக்கு அழைத்து விட்டோம் அதில் நாங்கள் பதில் சொல்வோம் என்று ஏமாற்றுவதற்காகவே இந்தப் பதிவைப் போட்டனர்.

ஆனால் நம் மக்கள் விடவில்லை. நீங்கள் அமாவாசைக் கொள்கைக்கு ஆதரவாக சில வாதங்களை வைத்தீர்கள்; அதற்கு நாங்கள் மறுப்பைப் பதிவிட்டுள்ளோம். எனவே அதற்கு நேரடியாக வரிக்கு வரி பதில் சொல்லுங்கள்! நீங்கள் பீஜேயுடன் விவாதிப்பதற்கும் எங்களுக்குப் பதில் சொல்லாமல் ஓட்டம் பிடிப்பதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலானார்கள்.

இதன் பிறகாவது கேட்ட கேள்விகளுக்குப் பதில் தந்திருக்க வேண்டுமல்லவா? தரவில்லை. ஏனெனில் கியாமத் நாள் வரையிலும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை நம் சகோதரர்கள் கேட்டு இருந்தனர். எனவே மீண்டும் ஓட்டம் எடுக்கும் வகையில் பின்வரும் பதிலை பதிவு செய்தனர்.

பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக் கொள்கிறோம்.

எங்கள் இமெயில் முகவரி:

[email protected] <mailto:[email protected]> (August 14 2010

ஜாக் என்பது தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான அமைப்பு ஆகும். பீஜேக்கும், ஜாக்குக்கும் எந்த நட்பும், உறவும் இல்லை. ஆனால் ஹிஜ்ரா கமிட்டி என்பது ஜாக்கின் கள்ளக் குழந்தை. இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதே ஜாக்கின் அறிவற்ற செயல்பாடுகள் தான்.

பிறை விஷயத்தில் கூட ஜாக்குக்கும், தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் முரண்பாடு உள்ளது. அப்படி இருக்கும் போது பீஜே போய் ஜாக் தலைவரை இவர்களுடன் விவாதிக்க அழைத்து வரவேண்டுமாம்! மூளையுள்ள ஒருவர் இப்படி ஒரு அறைகூவல் விட முடியுமா?

இவர்களின் விவாத அழைப்பு என்பதே ஓடி ஒளிவதற்காகக் கையாளும் தந்திரம் என்பதால் பீஜே ஆரம்பத்தில் இதைக் கண்டு கொள்ளவில்லை. இரண்டாவதாகவும் அதையே ஹிஜ்ரா கும்பல் கூறியதால் இந்த அறைகூவலுக்கு பீஜே பின்வருமாறு பதிலளித்து அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும். மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.

இவர்கள் மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஓடி ஒளியும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் ஆரம்பத்தில் கண்டு கொள்ளவில்லை.

கீழ்க்கண்டவாறு அவர்கள் தெளிவுபட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

எங்களுக்கும், உங்களுக்கும் இடையே முரண்பாடாகவுள்ள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்.

மேற்கண்டவாறு எழுதி

விவாதக் குழுத் தலைவர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

30 அரண்மனைக்காரன் தெரு,

மண்ணடி சென்னை-1

என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்!

அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன் September 20 , 2010

இப்படி பீஜே எழுதியதும் இவர்களின் இணையதளத்துக்கு மக்கள் கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்கலானார்கள்.

எங்கள் கேள்விகளுக்குத் தான் பதில் சொல்ல வக்கில்லை. உங்கள் விவாத அழைப்பை ஏற்றுக் கொண்ட பீஜேக்கு பதில் கொடுங்கள். எப்போது கடிதம் அனுப்பி விவாதத்தை நடத்தப் போகிறீர்கள்? என்று இவர்களது ஆதரவாளர்களே அவர்களது இணையதளத்தில் "எப்போ விவாதம்? எப்போ விவாதம்? என இவர்களை நச்சரித்து இவர்களைத் திக்கு முக்காடச் செய்தனர்.

இதற்கு அவர்கள் அவ்வப்போது பதில் அளித்தனர்.

செப்டம்பர் 20 அன்று அளித்த பதில் இதுதான்:

உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும். மற்றவை பின்

adminjaqh.net <http://jaqh.net/> September 20 2010

கடிதம் எழுத ஏன் தயக்கம்? உடனே பீஜேக்கு கடிதம் எழுதி விவாத அறைகூவலை உண்மைப்படுத்த வேண்டியதுதானே என்று மீண்டும் மக்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இதற்கு செப்டம்பர் 22 அன்று அளித்த பதில் இதுதான்.

இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

இப்படிக்கு நிர்வாகி September 22 2010

இந்தப் பதிலில் இவர்களின் ஆதரவாளர்களே திருப்தி அடையாததால் நீண்ட நாள் தள்ளிப்போட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து செப்டம்பர் 23 அன்று பின்வரும் பதிலைத் தந்தனர்.

பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே? நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்குப் பிறகு தான் எங்களால் இன்ஷா அல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன். எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும்.

இப்படிக்கு தள நிர்வாகி September 23 2010

ஹஜ் பயணத்துக்கும், கடிதம் போடுவதற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. விவாதத்துக்கு வருகிறோம்; ஆனால் ஹஜ் முடிந்த பின்னர் இந்தத் தேதிக்கு வருகிறோம் என்று பதில் எழுதலாம். அல்லது உடனே கடிதம் எழுதி ஒப்பந்தம் போட்டுவிட்டு விவாதத்தை ஹஜ்ஜுக்குப் பின் நடத்துவதாக ஒப்பந்தம் செய்ய முடியும். ஓடி ஒளிவது தான் நோக்கம் என்பதால் ஹஜ்ஜின் மீது பழியைப் போட்டு தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஹஜ் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் இதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் மக்கள் மீண்டும் நெருக்கடி கொடுக்கலானார்கள்.

2011 ஜனவரி 22 அன்று இதற்கு அளித்த பதிலைப் பாருங்கள்!

விவாதம் அல்லாஹ் நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

இப்படிக்கு நிர்வாகி January 22 , 2011

கடிதம் அனுப்புவோம்;

இதோ அனுப்பப்போகிறோம்.

வேலை நடக்கிறது;

ஹஜ் முடிந்ததும் அனுப்பி விடுவோம்

என்றெல்லாம் எழுதி வந்தவர்கள் கடைசியாக எழுதிய ஒரு பதிலே இவர்களின் அயோக்கியத்தனத்தை முழுமையாக அம்பலமாக்கியது.

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடி விவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.

Hijra Committee (Yervadi) – 29 March, 2011

இப்படி பகிரங்கமாக அறிவித்த அறிவீனர் கூட்டம் தான் ஹிஜ்ரா கமிட்டி.

இதில் இவர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பது புரிகிறதா?

அமாவாசை தான் தலைப்பிறை என்று வாதிட்டு பொய்களையும், விஞ்ஞானத்துக்கு முரணானவைகளையும் முன்வைத்தனர். அவை அப்பட்டமான தவறு என்று மக்கள் சுட்டிக் காட்டி அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிப் போட்டனர். தவறாக எழுதி விட்டோம் என்று அமாவாசையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அல்லது நாங்கள் சொன்னதுதான் சரி என்று கூறி நம் மக்கள் எடுத்து வைத்த வாதங்களை முறியடிக்க வேண்டும்.

இரண்டையும் செய்யாமல்

பரீசீலிக்கிறோம் என்றும்

பரிசீலிக்கவில்லை பீஜேயுடன் விவாதிக்க தயார் என்றும்

விரைவில் நடக்கும் என்றும்

விரைவில் நடக்காது; ஹஜ் பயணம் முடிந்த பின்னர் நடக்கும் என்றும்

ஹஜ் பயணம் முடிந்தாலும் ஆதாரங்களைத் திரட்ட வேண்டியுள்ளதால் கொஞ்சம் தாமதமாகும் என்றும்

இறுதியாக பீஜேயை விவாதத்துக்கு அழைத்தது தவறு என்றும்

எத்தனை பல்டிகள்!

பீஜேயுடன் விவாதிக்கவில்லை என்றால் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில்?

மக்களே இந்த அறிவீனர்களின் சொல்லைக் கேட்டா நீங்கள் நோன்பு பெருநாள், ஹஜ்பெருநாள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கப் போகிறீர்கள்?

இவர்கள் பொய் பேசுவதற்கு கடுகளவும் கூச்சப்படாதவர்கள் என்பது புரிகிறதா?

நம் மக்கள் என்ன கேட்டார்கள்? இன்று வரை பதில் சொல்ல முடியாத அந்தக் கேள்விகள் யாவை? அடுத்த பதிவில் பாருங்கள்!

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit