கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா?

ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா?

தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்?

ஜெ.ஹிதாயதுல்லாஹ்

பதில்:

கடமையான தொழுகைகளை ஆண்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றுவது அவசியம். பள்ளியில் ஜமாஅத்தாக தொழாமல் வீட்டில் தொழுவதை அனுமதிக்கும் காரணங்கள் இருக்கும் போது மட்டும் ஆண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாம்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடமையான தொழுகைகளைக் கூட்டாகத் தொழலாம். ஆனால் மனைவி கணவனுடன் சேர்ந்து நிற்காமல் கணவனுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும்.

மனைவியானாலும், தாயானாலும் அவர்கள் தொழுகையில் ஆண்களுக்கு அருகில் நிற்கக்கூடாது. ஆண்களுக்குப் பின்னால் தனி  அணியில் நிற்க வேண்டும்.  பின்வரும் செய்திகளிலிருந்து இதை அறியலாம்.

1350 : أن أبا طلحة دعا رسول الله صلى الله عليه و سلم إلى عمير بن أبي طلحة حين توفي فأتاهم رسول الله صلى الله عليه و سلم فصلى عليه في منزلهم فتقدم رسول الله صلى الله عليه و سلم و كان أبو طلحة وراءه و أم سليم وراء أبي طلحة و لم يكن معهم غيرهم رواه الحاكم

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னாலும், அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும் நின்றார்கள். அபூதல்ஹா (ரலி)க்குப் பின்னால் அவர்களது மனைவி உம்மு சுலைம் (ரலி) நின்றார்கள். இவர்களுடன் வேறு யாரும் இல்லை.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபிதல்ஹா

நூல்: ஹாகிம் 1350

அபூதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் கணவராக இருந்தாலும் தொழுகையில் இருவரும் அருகருகே நிற்கவில்லை. மாறாக தொழுகையில் ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நிற்க வேண்டும் என்ற பொதுவான ஒழுங்கு முறையைத் தான் கடைபிடித்துள்ளார்கள்.

தாயும், மகனும் சேர்ந்து தொழும் போதும் இந்த முறைப்படித் தான் தொழுகையில் நிற்க வேண்டும்.

380حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدْ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ وَالْيَتِيمَ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ  رواه البخاري

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அதில் சிறிதளவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், "எழுங்கள்! உங்களுக்காக நான்  தொழுவிக்கிறேன்'' என்று கூறினார்கள். நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்த பாயை எடுத்து அதில் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு திரும்பிச் சென்றார்கள்.

நூல் : புகாரி 380

727حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ إِسْحَاقَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

எங்களது வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் இருந்தார்கள்.

நூல் : புகாரி 727

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit