நோன்புப் பெருநாள் தர்மத்தின் சட்டங்கள்

ஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா? கேள்வி : ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் அன்று காலையில் தான் அதை வழங்க வேண்டும்; முன் கூட்டியே வழங்கக் கூடாது என்றும் சவூதியில் உள்ள அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். […]

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா?

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா? மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? முஹம்மது சைபுல்லா. முஸ்லிம்கள் தங்கள் செல்வங்களை மார்க்கப்பணி போன்ற நல்வழியில் செலவிட வேண்டும் என இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதற்கு மறுமையில் மிகப் பெரிய பரிசுகளை அளிப்பதாகவும் வாக்களிக்கின்றான். தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது […]

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? அப்துல் ரஹ்மான் பதில்: பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன. صحيح البخاري 2041 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعْتَكِفُ فِي كُلِّ […]

சகோதரி மகளைத் திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

இந்து மதத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைய ஆர்வப்படுகிறார். அவர் தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்வது கூடாது. எனவே இஸ்லாத்திற்கு வர விரும்பும் இவர் என்ன செய்ய வேண்டும்? ரஷீத் பதில்: சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சட்டம் தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகு அவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் என்பதே மார்க்கச் […]

அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா?

அல்ஜன்னத் இதழில் பிஜே ஆசிரியராக இருந்த போது ஜனவரி 1996ல் அளித்த பதில் உங்களுடைய இஸ்லாம் மாக்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும் என இஸ்லாம் கூறுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் அரபு நாடுகளில் ஏராளமானோர் அறுத்துப் பலியிடுவதால் வாங்குவோர் இன்றி மாமிசங்கள் புதைக்கப்படுகின்றன. இது வேஸ்ட் தானே! என்று என் தோழி ஒருத்தி கூறுகிறாள். இதற்கு என்ன பதில் கூறலாம். ஏ.ஜீனத்துன்னிஸா, நாகப்பட்டினம். […]

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை. ரஃபீக், நாகர்கோவில் பதில்: பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை தான். அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் சிலை வழிபாடு […]

ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா?

கேள்வி: திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. ஆனால், திருமணத்தின் போது பெண்கள் ஆண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை அனுமதிக்கிறது. இது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா? என்று என் நண்பர் ஒருவர் கேட்கிறார். அப்துல் முனாப், அல்-அய்ன். விளக்கம் : பொதுவாக வாங்குவதை விட கொடுப்பது எப்போதுமே கஷ்டமானது தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனைவிக்குச் சோறு போடுவதும், உடைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்துக் கொடுப்பதும் கூட ஆண்களுக்குக் கஷ்டமானது தான்.

குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா அவசியமா?

கேள்வி: மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய் பிரச்சனை காரணமாக, கர்ப்பப் பையை அகற்றியவர்கள், தள்ளாத வயதுடைய கிழவிகள் ஆகியோருக்கு இத்தா அவசியமா?  -பாட்சா பஷீர், அல்ஜூபைல். பதில்: இறந்து போன கணவனின் கருவை மனைவி சுமந்திருக்கிறாரா? என்பதை அறிவது இத்தாவுடைய நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்?

கேள்வி: இஸ்லாமிய முறைப்படி ஒரு மனிதன் தன் மனைவியை மூன்றாவது தடவையாக விவாகரத்து செய்து விட்டால் மீண்டும் அவளைத் திருமணம் செய்ய முடியாது; அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமென்றால், அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் முடித்து, அவன் அந்தப் பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொண்டு அவளை விவாகரத்து செய்த பின்பு தான் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமியச் சட்டம் சரியா? என்று முஸ்லிமல்லாத நண்பர் என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்று […]

திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?

என்னுடைய இந்து நண்பர் திருக்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவைக் குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி, மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும். -எம். திவான் மைதீன், பெரியகுளம் பதில் : இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல் – வாங்கல், […]