திருக்குர்ஆன் அத்தியாயங்களின் அட்டவணை
அத்தியாயங்களின் அட்டவணை 1. அல் ஃபாத்திஹா 2. அல் பகரா 3. ஆலு இம்ரான் 4. அந் நிஸா 5. அல் மாயிதா 6. அல் அன்ஆம் 7. அல் அஃராஃப் 8. அல் அன்ஃபால் 9. அத்தவ்பா 10. யூனுஸ் 11. ஹூது 12. யூசுஃப் 13. அர்ரஃது 14. இப்ராஹீம் 15. அல் ஹிஜ்ர் 16. அந்நஹ்ல் 17. பனூ இஸ்ராயீல் 18. அல் கஹ்ஃப் 19. மர்யம் 20. தாஹா 21. அல் […]
512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்?
திருடுவோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்று இவ்வசனத்தில் (5:38) சொல்லப்படுகிறது. மணிக்கட்டு வரைக்குமா? முழங்கை வரைக்குமா? தோள்புஜம் வரைக்குமா? என்று விளக்கப்படவில்லை. ஆனாலும் கை என்பது இந்த இடத்தில் எதைக் குறிக்கிறது என்று சிந்தித்து அறிய முடியும்.
511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா?
இவ்வசனங்களில் (7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4) அல்லாஹ் அர்ஷின் மீது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்தில் மற்றவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் போது அர்ஷின் மீது அமர்ந்தான் என்று ஏன் நாம் தமிழாக்கம் செய்துள்ளோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்களில் இஸ்தவா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்?
இவ்விரு வசனங்களும் (24:24, 36:65) ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது போல் தோன்றலாம். 24:24 வசனம் மறுமையில் நாவுகள் பேசும் என்றும், 36:65 வசனம் வாய்களுக்கு மறுமையில் முத்திரை இடப்படும் என்றும் கூறுவதால் மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடு போல் தோன்றினாலும் சிந்திக்கும் போது இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.
509. இப்லீஸ் என்பவன் யார்?
ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவருக்குப் பணியுமாறு அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைப்படி வானவர்கள் பணிந்தனர். ஆனால் இப்லீஸ் மட்டும் பணிய மறுத்து விட்டான் என்று இவ்வசனங்கள் (2:34, 7:11, 15:31, 17:61, 18:50, 20:116, 38:74) கூறுகின்றன. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது இப்லீஸைத் தவிர மற்ற வானவர்கள் பணிந்தனர் என்று கூறப்படுவதால் அவனும் வானவர்களில் ஒருவனாக இருந்தான் என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளது.
508. குலத்தால் பெருமையில்லை
இவ்விரு வசனங்களும் (49:13, 53:32) பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன. இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று 49:13 வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான். மனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது.
507. வானம் என்பது என்ன?
வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும். வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்?
இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.
505. மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்?
இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். மீன் அல்லாத உயிரினங்களை அறுக்க வேண்டும்; மீனை அறுக்காமல் உண்ணலாம் என்ற வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? என்று சந்தேகம் சிலருக்கு உள்ளது.
504. ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா?
இவ்வசனங்களில் (4:1, 7:26, 7:27, 7:31, 78:35, 7:172, 7:189, 17:70, 36:60, 39:6) இறைவன் ஒரு ஜோடி மனிதரை மட்டுமே நேரடியாகப் படைத்தான் என்றும், மனித குலம் முழுவதும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்றும் கூறப்படுகிறது. ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.