இரவு முழுதும் வணங்கலாமா?
இரவு முழுதும் வணங்கலாமா? 25:64 வசனத்தில் நல்லடியார்களைப் பற்றிக் கூறும் போது, இறைவனை வணங்கியவர்களாக இரவைக் கழிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சில நபிமொழிகளில் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பவர்கள் இந்த நபிமொழிக்கு மாறுபடுகின்றார்களே! விளக்கவும். அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள். திருக்குர்ஆன் 25:64 பதில் திருக்குர்ஆனில் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக […]
ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?:
ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?: ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு பதில்! தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள். ஸஹருக்கு பாங்கு சொல்வது நபி வழி என்பதை நாம் அறிவோம். இது குறித்த முழு தகவல்களைக் காண இங்கே கிளிக் […]
மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா?
மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா? பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல்கள் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது. பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்வது கூடாது. பள்ளிவாசல்களுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர்வது கூடாது. பள்ளிவாசல்களில் வியாபாரம் செய்வது கூடாது. பள்ளிவாசல்களில் இல்லறம் தொடர்பான எந்தக் […]
இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?
இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா? அப்துந்நாஸிர் பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர். தொழுகையின் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்குத் தடை உள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகின்றது. ஆனால் தொழுகைக்கு வெளியே இவ்வாறு ஊன்றி உட்கார்வதை தடை செய்தது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன. இது […]
ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா?
ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா? அப்துந் நாசிர் இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர். முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு அமரும் முறைக்கு அரபியில் இஹ்திபாவு என்றும் […]
தொழுகையை விட்டவன் காஃபிரா?
தொழுகையை விட்டவன் காஃபிரா? தொழுகையை விட்டவன் காஃபிர் என்று சில அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர். அஹ்மத், இப்னு ஹஸ்ம் மற்றும் தற்கால சவூதி அறிஞரான பின்பாஸ் ஆகியோர் தொழுகையை விட்டவன் காஃபிர் என்று தீர்ப்பு அளித்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் இவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொள்கின்றனர். صحيح مسلم 256 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ كِلاَهُمَا عَنْ جَرِيرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَرِيرٌ […]
ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?
ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். صحيح البخاري 1015 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الجُمُعَةِ، إِذْ جَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ قَحَطَ المَطَرُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَدَعَا […]
மாநபி வழியில் மழைத் தொழுகை
மாநபி வழியில் மழைத் தொழுகை நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம். – حدثنا هارونُ بنُ سعيد الأيلي، حدثنا […]
ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்?
ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்? ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத் தொழ வேண்டுமா? ஜும்ஆத் தொழுகையின் கடைசி ரக்அத்தை ஒருவர் தவறவிட்டால் அவர் எழுந்து நான்கு ரக்அத்கள் லுஹர் தொழ வேண்டும் என்று நேரடி வாசகத்தைக் கொண்ட செய்திகள் இருக்கின்றன. அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும். […]
தாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்?
தாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்? ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் எந்த நிலையில் இருக்கும் போது சேர்ந்தால் அவருக்கு ரக்அத் கிடைக்கும்? தொழுகையில் ருகூஃவிலிருந்து இமாம் நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம். இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் இருந்தாலும் பின்வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும். حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ الْأَعْلَمِ وَهُوَ زِيَادٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى […]