முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா?

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா?

சிறுவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் நிற்க பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. முன் வரிசையில் இடம் இருந்தாலும் கூட அதைத் தடுக்கின்றனர். இது சரியா?

ரஸ்மின்

பதில் :

صحيح مسلم

1000 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ التَّيْمِىِّ عَنْ أَبِى مَعْمَرٍ عَنْ أَبِى مَسْعُودٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَمْسَحُ مَنَاكِبَنَا فِى الصَّلاَةِ وَيَقُولُ « اسْتَوُوا وَلاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِنِى مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ». قَالَ أَبُو مَسْعُودٍ فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلاَفًا.

பருவமடைந்தவர்கள் எனக்கு அடுத்து நிற்கட்டும். அதற்கடுத்த வயதினர் அடுத்து நிற்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸினடிப்படையில் பருவமடைந்தவர்கள் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.

பருவமடைந்தவர்களே வரிசையை நிரப்பும் அளவுக்கு இருந்தால் தான் இந்த நிலை. பருவமடைந்தவர்கள் வரிசையில் நின்ற பின்னர் இடம் இருந்தால் அல்லது சிறுவர்கள் மட்டுமே இருந்தால் அவர்கள் முதல் வரிசையில் தான் நிற்க வேண்டும். காலதாமதமாக வருபவருக்காக இடத்தை முன்பதிவு செய்து வைத்தல் இஸ்லாத்தில் இல்லை.

صحيح البخاري

76 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: «أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَيَّ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் சுவர் எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன். -அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- வரிசையில் ஒரு பகுதியை நான் கடந்துசென்று கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று (ஒரு வரிசையில்) நானும் நின்று கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையை கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 76

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பருவமடையாதவராக இருந்த போதும் முன் வரிசையில் காலியாக இருந்த இடத்தில் நின்றுள்ளார் என்று இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

صحيح البخاري

380 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

என் பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்த பாயை எடுத்து அதில் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். உடனே நானும், ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு திரும்பிச் சென்றார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 380

முதல் வரிசையை நிரப்ப, பெரியவர்கள் இல்லாத போது சிறுவர்களே முதல் வரிசையாக நின்றுள்ளனர் என்பதற்கு இது சான்றாக உள்ளது. எனவே இடம் காலியாக இருந்தால் சிறுவர்களை முன் வரிசையில் நிற்பதை யாரும் தடை செய்யக் கூடாது.