ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?

ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?

ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?

பதில் :

ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.

صحيح البخاري

636 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»

நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : புகாரீ 636

தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

سنن الترمذي

3 – حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالُوا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا  سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ

தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (ஸலாம் கொடுத்தல்) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

அல்லாஹு அக்பர் என்று கூறித்தான் ஒருவர் தொழுகையில் சேர முடியும். இமாம் எந்த நிலையில் இருக்கும் போது வந்து சேர்ந்தாலும் அல்லாஹு அக்பர் எனக் கூறாமல் தொழுகையில் சேர முடியாது.

தக்பீர் மூலம் தான் தொழுகையில் சேர முடியும் என்பதில் தக்பீர் என்ற சொல்லைத் தவறாக விளங்க்கிக் கொண்டு கைகளைக் கட்டிவிட்டுத் தான் சேர வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

தக்பீர் என்பது அல்லாஹ் அக்பர் என்ற சொல் தான். கைகளைக் கட்டுதல் என்று இதற்குப் பொருள் இல்லை. தக்பீர் கட்டுதல் என்று சொல்வழக்கே தவறானதாகும்.

தக்பீர் கூறுதல் வேறு; கைகளைக் கட்டுதல் வேறு.

இமாம் ருகூவில் இருக்கும் போது நாம் சேர்ந்தால் ருகூவில் கை கட்டுதல் இல்லை என்பதால் கைகளைக் கட்டாமல் அல்லாஹு அக்பர் எனக் கூறி ருகூவில் சேர வேண்டும். இமாம் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையில் தக்பீர் கூறி சேர வேண்டும். இமாம் நிலையில் நிற்கும் போது சேர்ந்தால் நிலையில் கைகளைக் கட்ட வேண்டும் என்பதால் அப்போது மட்டும் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும்.  

கைகளைக் கட்டிய பின்னர் தான் இமாம் இருக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை.