விவாதம் செய்ய ஒப்புக் கொண்டு ஓட்டம் எடுத்த ஜாக் மற்றும் ஹிஜ்ரா கமிட்டி

விவாதம் செய்ய ஒப்புக் கொண்டு ஓட்டம் எடுத்த ஜாக் மற்றும் ஹிஜ்ரா கமிட்டி

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம். 

– Hijra Committee (Yervadi) – 29 March, 2011

விவாதம், விவாதம்  என்று சில மாதங்களுக்கு முன்னர் கூக்குரல் இட்டவர்களின் இன்றைய அறிவிப்பை மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். முன்னர் இவர்கள் என்னென்ன சவடால்கள் விட்டார்கள், விவாதத்திற்கு பதில் கொடுத்து அவர்களிடம் முடிவைக் கேட்ட போது எவ்வாறெல்லாம் காலம் கடத்தினார்கள், என்பனவற்றையெல்லாம் இப்போது நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

ஹிஜ்ரா கமிட்டியின் விவாத அழைப்பு

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு டி.என்.டி.ஜே யையும் ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது. நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.

– ஹிஜ்ரா கமிட்டி – ஜூலை, 2010

இதற்கு பிஜே (TNTJ ) வின் பதில் :

பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும். மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும். மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் ஆனால் ஓடி ஒளியும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை. கீழ்க்கண்டவாறு அவர்கள் தெளிவுபட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே முரண்பாகவுள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடயே கருத்து வெறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்.  மேற்கண்டவாறு எழுதி விவாதக் குழுத் தலைவர், தமிழ்நாடு தஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்னடி சென்னை-1 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்

அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன் September 20 , 2010

அதன் பிறகு, இவர்கள் முறையான பதிலை சொல்லி , முறைப்படி விவாதத்திற்கு முன்வந்திருக்க வேண்டும்.. ஆனால், அதைச் செய்யாமல் பல சாக்கு போக்குகள் சொல்லி காலம் கடத்தி வந்தார்கள். பல சகோதரர்கள் இது குறித்து கேள்விகள் பல எழுப்பிய போதும், மழுப்பலான பதிலை தந்து காலம் கடத்துவதிலேயே தான் குறியாக இருந்து வந்தார்கள் இந்த ஹிஜ்ரா கமிட்டியினர்.

ஹிஜ்ரா கமிட்டியின் பதில்

கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ். இப்படிக்கு தள நிர்வாகி July 15, 2010 பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:[email protected] (August 14 2010 உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும். மற்றவை பின்

admin jaqh.net September 20 2010

ஹிஜ்ரா கமிட்டியின் இரண்டாம் பதில்

இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

இப்படிக்கு நிர்வாகி September 22 2010

ஹிஜ்ரா கமிட்டியின் மூன்றாம் பதில்

பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே? நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன். எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும்.

இப்படிக்கு தள நிர்வாகி September 23 2010

நாஷித் போன்றவர்களுக்கு இந்த விவாத ஒப்பந்தத்தில் எந்த பங்கும் கிடையாது. அதனால் விவாதக்குழு என்றெல்லாம் பதிந்து மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு, பி.ஜே யின் கொள்கையை மட்டுமாவது இணையத்தில் ஒழுங்காக பிரச்சாரம் செய்து வந்தால் சரி. மேலும் யாருடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமோ அதை நாங்கள் நன்கறிவோம். ஆகவே சம்மந்தமில்லாத உங்களை போன்றவர்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்து நலம்.

நிர்வாகி January 22 , 2011

ஹிஜ்ரா கமிட்டியின் நான்காம் பதில்

விவாதம் அல்லாஹ்நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

இப்படிக்கு நிர்வாகி January 22 , 2011

ஹிஜ்ரா கமிட்டியின் ஐந்தாம் பதில்

இவை, விவாத சவடாலை மெய்ப்படுதுங்கள், ஏன் தாமதிக்கிறீர்கள், என்று பல சகோதரர்கள் கேட்டுக்கொண்டவற்றுக்கு இவர்கள் தங்கள் இணையதளத்தில் சொல்லியுள்ள பதில்.. பிஜே உடன் விவாதிக்க போகிறார்கள், என்று அவர்களது கொள்கையில் இருப்பவர்கள் கூட மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்து வந்த நிலையில், அவர்களது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் இவர்கள் விடுத்துள்ள இறுதி அறிக்கை இதோ.

ஹிஜ்ரா கமிட்டியின் ஆறாவது பதில்

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.

– Hijra Committee (Yervadi) – 29 March, 2011

அறிந்து கொள்ளுங்கள். இவர்கள் தான் ஏர்வாடி JAQH என்று செயல்படும் ஹிஜ்ரா கமிட்டியினர் !!