அத்தியாயம் : 51
அத்தாரியாத் – புழுதி பரத்தும் காற்றுகள்
மொத்த வசனங்கள் : 60
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1, 2, 3, 4. வேகமாக புழுதியைப் பரத்துபவை மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும், எளிதாகச் செல்பவை மீதும், கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக! 379&26
5. நீங்கள் எச்சரிக்கப்படுவது உண்மை.
6. அந்தத் தீர்ப்பு நடந்தேறும்.
7. பாதைகளையுடைய323 வானத்தின்507 மீது சத்தியமாக! 379
8. நீங்கள் முரண்பட்ட கூற்றில் இருக்கிறீர்கள்.
9. இதை விட்டும் திசை திருப்பப்படுபவர் திசை திருப்பப்படுகிறார்.
10. பொய்யர்கள் அழிவார்கள்.
11. அவர்கள் மயக்கத்தில் மறந்திருக்கிறார்கள்.
12. "தீர்ப்பு நாள்1 எப்போது?'' எனக் கேட்கின்றனர்
13. அவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படும் நாள்1 தான் அது.
14. உங்கள் வேதனையைச் சுவையுங்கள்! எதை அவசரமாகத் தேடினீர்களோ அது இதுவே. (என்று கூறப்படும்.)
15, 16. (இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக இருந்தனர்.26
17. இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.
18. இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
19. யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது.
20, 21. உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?26
22. வானத்தில்507 உங்கள் உணவும், நீங்கள் வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.
23. வானம்507 மற்றும் பூமியின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசுகிறீர்கள் என்பது (உண்மையாக இருப்பது) போல் இது உண்மை.
24. இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
25. அவரிடம் அவர்கள் வந்து ஸலாம்159 கூறியபோது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் (அவருக்கு) அறிமுகமில்லாத சமுதாயம்!
26. தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
27. அதை அவர்களின் அருகில் வைத்து "சாப்பிட மாட்டீர்களா?''171 என்றார்.
28. அவர்களைப் பற்றிப் பயந்தார். "பயப்படாதீர்!'' என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.
29. உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, "நான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்றார்.
30. அதற்கவர்கள் "அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்'' என்றனர்.
31. "தூதர்களே!161 உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார்.
32, 33, 34. "வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்''412என்று அவர்கள் கூறினர்.26
35. அங்கே இருந்த நம்பிக்கை கொண்டோரை வெளியேற்றினோம்.
36. முஸ்லிம்களின்295 ஒரு வீட்டைத் தவிர வேறு எதையும் அங்கே நாம் காணவில்லை.
37. துன்புறுத்தும் வேதனை பற்றி அஞ்சுவோருக்கு அங்கே சான்றை விட்டு வைத்தோம்.
38, 39. மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். "இவர் சூனியக்காரரோ,357பைத்தியக்காரரோ''285 எனக் கூறினான்.26
40. எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவன் இழிந்தவனாக இருக்க அவர்களைக் கடலில் வீசினோம்.
41. ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம்.366
42. அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.
43. ஸமூது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. "குறிப்பிட்ட காலம் வரை அனுபவியுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.
44. அவர்கள் தமது இறைவனின் கட்டளையை மீறினர். எனவே அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை இடி முழக்கம் தாக்கியது.
45. அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை.
46. முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் (அழித்தோம்) அவர்கள் குற்றம் செய்யும் கூட்டமாக இருந்தனர்.
47. (நமது) வலிமையால் வானத்தைப்507 படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.421
48. பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள்.
49. நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.242
50, 51. எனவே அல்லாஹ்வை நோக்கி விரையுங்கள்! நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன். அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்கள்! நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் (என்று ஒவ்வொரு தூதரும் கூறினர்.)26
52. இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர்285 என்றோ கூறாமல் இருந்ததில்லை.357
53. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர்.
54. எனவே (முஹம்மதே!) அவர்களை அலட்சியம் செய்வீராக! நீர் குறை கூறப்பட மாட்டீர்.
55. அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.
56. ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.368
57. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
58. அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்;463 உறுதியானவன்; ஆற்றல் உடையவன்.
59. அநீதி இழைத்தோருக்கு அவர்களின் முன் சென்ற சகாக்களின் தண்டனையைப் போல் தண்டனை உள்ளது. எனவே அவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
60. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளில்1 கேடு உள்ளது.