அனைவரையும் முட்டாளாக்கிய ஹிஜ்ரா கூட்டத்தார்!
நாஷித் என்ற சகோதரருக்கும் அமாவசைக் கூட்டமான ஹிஜ்ரா கமிட்டிக்கும் பிறை தொடர்பாக நடந்த வாதப்பிரதிவாதங்களை வெளியிட்டுள்ளார். ஹிஜ்ரா கமிட்டியின் அறிவீனத்தையும் அயோக்கியத்தனத்தையும் அம்பலமாக்கும் அந்த ஆக்கத்தை வெளியிடுகிறோம். ஹிஜ்ரா கமிட்டி முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம் – வெப்மாஸ்டர்
நேரடி விவாதத்திற்கு வர இயலாது, எழுத்து விவாதத்திற்கு தயார் என்று இப்போது அடுத்த சவடாலை விடுத்திருக்கும் ஏர்வாடி ஹிஜ்ரா கமிட்டியினர், நம்மோடு நடந்த எழுத்து விவாதத்தின் போது, கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கழன்று ஓடுவதற்கு "பிஜே உடன் விவாதிக்க போகிறோம்", இனிமேல் நாஷிதின் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டோம்", நாஷிதொடு எழுத்து விவாதத்தை தொடர மாட்டோம், என்று சப்பைக்காரணம் சொன்னார்கள் என்று முந்தைய பதிப்பில் குறிப்பிட்டிருந்தோம்.
அதோடு, நாம் எழுத்து விவாதத்தை மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று இறுதியாக ஒரு அழைப்பை கொடுத்த பின்னரும் கூட, ஒளிந்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்..
இவற்றுக்கான ஆதாரங்களை இங்கு தருகிறோம்.. (மாதம், தேதி ஆகிய விபரத்துடன்..)
நாஷித் – ஜனவரி 18 , 2011
அன்பு சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு.. இதுவரை நிகழ்ந்த விவாதத்தின் போது, பல பல கேள்விகளையும், ஹதீஸ்களையும் நான் முன்வைத்த போதும் கூட, நான் மெயில்களைப் பிரிக்கிறேன் என்றும், முழு ஹதீஸ்களையும் பதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்து, அதைச் சரி செய்யும் பட்சத்தில் மட்டுமே நாம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன் என்று கூறி வந்தீர்கள். ஆதாரங்கள் சொன்ன பிறகும் கூட, வேறு வேறு காரணங்களைக் கூறி பதில் சொல்வதை விட்டும் தவிர்ப்பதை தானே சிராஜ் நோக்கமாக கொண்டிருக்கிறார் என்ற வகையில், ஒரு கட்டத்தில், உங்களுடனான விவாதத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நான் நினைத்தேன்.
ஆனால், இதன் காரணமாக, அந்த ஹதீஸ்களுக்கு நீங்கள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள், நான் சொல்லும் ஆதாரங்கள் எனது கொள்கைக்கு எவ்வாறு முரணாக இருக்கிறது என்பதை நானும் பிறரும் அறிய ஒரு சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது என்ற கவலையும் இன்னொரு பக்கம் உள்ளது. இறைவனை முன்னிறுத்தி மட்டுமே நான் இதுவரை விவாதம் செய்து வந்ததால், எனது கருத்தில் தவறு இருக்கிறதா? என்பதை இதுவரை என்னால் அறிய முடியாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது. இதை மனதில் கொண்டு உங்களுக்கு நான் மீண்டும் ஒரு அழைப்பை இறுதியாக கொடுக்கிறேன்..
பிறை குறித்த விவாதத்தை மீண்டும் செய்வோம், வாருங்கள்.. ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு இறுதி அழைப்பு என்று நான் அழைப்பு கொடுத்ததற்கு ஹிஜ்ரா கமிட்டியினர் (ஏர்வாடி சிராஜ்) தந்த பதில்களைப் பாருங்கள்.
பதில் ஒன்று
இவரிடம் நேரத்தை வீணடிப்பதை விட இவர் எல்லாவகையிலும் ஏற்றுக்கொண்ட சகோதரர் பி.ஜே வுடன் நாம் விவாத ஒப்பந்தம் செய்ய நாம் முடிவெடுத்து விட்டதால், இவரின் அனைத்து உளறல் கேள்விகளுக்கும் பி.ஜேயுடனான விவாத ஒப்பந்தத்தில் பதிலளிக்கப்படும் என்பதை குழும சகோதரர்களுக்கு நான் இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் இரண்டு
அதே போல் பிறையில் நாஷித்தின் தகிடுதத்தங்கள் அனைத்தும் பி.ஜே வுடன் ஆன விவாத்தில் தோலுரித்துக் காட்டப்படும் இன்ஷா அல்லாஹ்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் மூன்று
நான் மேற்கண்ட முடிவை அறிவித்த பின், அவர் அனுப்பிய கடைசி பதிவு நாஷித் அவர்களின் காலம் கடந்த முடிவை அறிவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் நான்கு
மேலும் இவருடன் நாம் இதற்குபின் புது ஒப்பந்தம் செய்து அதன் பின் விவாதம் செய்து முடித்துவிட்டு, நான் சகோதரர் பி.ஜேயுடன் செய்யப்போனால் அது சகோதரர் பி.ஜேயுடன் நான் செய்யவேண்டிய விவாதத்தை நானே காலம் கடத்துவதாகவே மக்கள் கருதிவிடுவார்கள்.
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் ஐந்து
அதிகமான மக்கள் தற்போதே நாம் சகோதரர் பி.ஜே விவாத அழைப்பை ஏற்காமல் காலம் கடத்திவருவதாக நம்மீது குற்றச்சாட்டையும் பதிந்துள்ளார்கள் என்பதையும் இத்தருணத்தில் பதிந்து கொள்கின்றோம்.
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் ஆறு
நான் இதுவரை இவருடன் விவாதம் செய்ததால், என்னுடைய நேரத்தை சகோதரர் பி.ஜே உடனான விவாத ஒப்பந்தத்திற்கான முன்னேற்பாடுகளுக்கு கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் ஏழு
எனவே குழும சகோதரர்கள் அனைவரும் சகோதரர் பி.ஜே யுடன் நான் செய்யப்போகும் விவாத ஒப்பந்தம் நேர்மையான முறையில் நடைபெறுவதற்காகவும், மக்கள் குழம்பியுள்ள பிறை பிரச்சினையில் அல்லாஹ் தெளிவாக நமக்கு அறிவித்துள்ளபடி நாம் அனைவரும் ஏற்று செயல்படுவதற்காகவும் பிரார்த்திக்கவும்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் எட்டு
மேலும் பி.ஜே அவர்களுடன் நாம் ஏற்படுத்தப்போகும் விவாத ஒப்பந்தத்திற்கான அனைத்து நிகழ்வுகளும் குழும சகோதரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாகவே இருக்கும் என்பதை தாங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் ஒன்பது
எனவே அவரும் சகோதரர் பி.ஜே யுடனான நமது விவாதத்தை கண்டு பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் பத்து
எனவே நாஷித் காலம் கடந்து திருந்தி, புதிய ஒப்பந்தத்திற்கு அழைத்துள்ளார் என்பதால் தற்போது எந்த உதவியும் என்னால் அவருக்கு செய்யமுடியாமல் உள்ளது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றேன்
சிராஜ் ஏர்வாடி : 18 Jan , 2011
பதில் பதினொன்று
மீண்டும் நாஷித் அவர்கள் திருந்தவில்லை; நான் திருந்தவும் மாட்டேன் என்று சொல்கின்றார் என்பதை நாம் அவருடை பதிவுகளில் இருந்து புரிய முடிகின்றது. எனவே அவரின் தவறுகளை இன்ஷாஅல்லாஹ் பட்டியலிடும் வரை காத்திருக்கட்டும். மேலும் சகோதரர் பி.ஜே யுடன் ஆன விவாத ஒப்பந்தம் சம்மந்தமாக முடிவு எடுக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகளில் நான் இருப்பதால், அந்த ஒப்பந்தம் முடிந்தபின் நாஷித் முபாஹலாவிற்கு அழைத்தது, விவாதத்தை முடித்து கொண்டதாக அறிவித்தது போன்றவற்றை இருட்டிப்பு செய்து மீண்டும் மக்களை எவ்வாறு குழப்புகின்றார் என்பதை புரிய வைப்போம் இன்ஷாஅல்லாஹ்
சிராஜ் ஏர்வாடி : 20 Jan , 2011
பதில் பன்னிரண்டு
எழுத்து விவாதத்திற்கு இவர்களை நாம் அழைத்த போது, அதற்குரிய பதிலை சொல்லாமலும், முன்பே நாம் கேட்டிருந்த கேள்விகள் எதற்கும் முறையான பதிலை சொல்லாமலும் நழுவி விட்டு, பிஜே உடன் நேரடியாக விவாதம் செய்ய முடிவெடுத்து விட்டோம், என்று அதை ஒரு காரணமாக, ஒரு கேடையமாக பயன்படுத்தி எழுத்து விவாதத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்கள் என்பதை மேலே ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளோம்.. சரி, ஒரு வேளை உண்மையில் பிஜே உடன் விவாதம் செய்வார்கள் போலும்.. .. அதையாவது எதிர்ப்பார்ப்போம், என்று நினைத்த நம் அனைவரையும் முட்டாளாக்கும் விதமாக அவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்த அறிவிப்பு இதோ.. நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்
ஹிஜ்ரா கமிட்டி – மார்ச் 29 , 2011
பதில் பதிமூன்று
இன்னும் ஒரு படி மேலே சென்று, இன்று அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பைப் பாருங்கள்.. நேயர் நாஷித் அவர்கள் உண்மையாளர் என்றால் எழுத்து மூலமான வாதத்திற்கு நாம் வர மாட்டோம் என்று எங்காவது கூறியிருந்தால் நீரூபிக்கட்டும்
ஹிஜ்ரா கமிட்டி – ஏப்ரல் 1
இவைதான் ஹிஜ்ரா கமிட்டி விவாதம் குறித்து போட்ட முரண்பட்ட பதில்கள்
ஏப்ரல் 1 அன்று நம் அனைவரையும் முட்டாளாக்கி விட்டனர்…!! ஏப்ரல் ஒன்றாம் நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவது என்பது மேற்கத்திய கலாசாரம், அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமில்லை என்பதை யாராவது இவர்களுக்குப் புரிய வைத்தால் நல்லது..! வஸ்ஸலாம்..