இசை கூடும் என்று சிலர் கூறுகிறார்களே?

இசை கூடும் என்று சிலர் கூறுகிறார்களே?

கேள்வி – எகிப்தை மையமாகக் கொண்டு இயங்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தினர் இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்கிறர்களே? இது பற்றி விளக்குக?

பதில்:     

இஸ்லாம் இசையைத் தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலையும் நமது இணையதளத்தில் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம்.

பார்க்க : இசை ஹராமா

இசை கேட்பது கூடும் என்று இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரும் நமது நாட்டில் அவர்களைப் பின்பற்றுவோரும் கூறுகிறார்கள்.

இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினர் இஸ்லாமிய ஆய்வாளர்கள் அல்லர். நமது நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல் இவர்கள் எகிப்து நாட்டின் அரசியல்வாதிகள். இங்குள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் எப்படி இசை மூலம் பாடல்களை ஒளிபரப்பி ஓட்டுப் பொறுக்குகிறார்களோ அது போல் அவர்களும் செய்கிறார்கள். மக்கள் கூட்டததைச் சேர்ப்பதற்கு இசை உதவும் என்பதற்காகவே இவர்கள் இசை கூடும் என்று பத்வா கொடுக்கின்றனர்.

இசை கூடும் என்பதற்கு மார்க்க அடிப்படையிலான ஆதாரம் ஏதும் இவர்களிடம் இல்லை.

இசை பற்றி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் என்ன சொன்னார்கள் என்று இவர்கள் பார்க்கவில்லை. இது இவர்களுக்குத் தேவையுமில்லை. இது பற்றிப் பேச அழைத்தால் முன்வரமாட்டார்கள்.

இவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இசை பயன்படுகின்றது என்ற ஒரு காரணத்துக்காகவே இசை கூடும் என்று கூறுகின்றனர். சுய நலனுக்காக மார்க்கத்தில் விளையாடும் இவர்களை சமுதாயம் அடையாளம் காண வேண்டும்.

04.09.2012. 3:09 AM

Leave a Reply