இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா?
இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா?
முஹம்மது ரசூல்.
பதில் :
வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
مسند أحمد بن حنبل (1/ 199)
1718 – حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع ثنا يونس بن أبي إسحاق عن بريد بن أبي مريم السلولي عن أبي الحوراء عن الحسن بن على قال : علمني رسول الله صلى الله عليه و سلم كلمات أقولهن في قنوت الوتر اللهم أهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضى ولا يقضى عليك إنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح رجاله كلهم ثقات
ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
வித்ருடைய குனூத்தில் நான் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன:)
அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன் வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த.
நூல் : அஹ்மத்
வித்ர் குனூத்தை இமாம் உட்பட பின்பற்றித் தொழுபவர்கள் அனைவரும் சப்தமின்றி அமைதியாகவே ஓத வேண்டும். வித்ர் குனூத்தில் இமாம் சப்தமிட்டு ஓத மற்றவர்கள் ஆமீன் சொல்லும் வழிமுறையை நபியவர்கள் கற்றுத் தரவில்லை.
இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் எந்த ஆதாரமும் இல்லை.