இறைவன் வானவர் வழியாக குர்ஆனை கொடுத்தது ஏன்?

இறைவன் வானவர் வழியாக குர்ஆனை கொடுத்தது ஏன்?

றைவன் மனிதனிடம் நேரடியாகப் பேசமாட்டாரா?  பைபிளில் கர்த்தர் தூதர்களிடம் நேரடியாகப் பேசியது பொன்ற வாசகங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனை தேவ தூதன் -ஜிப்ரீல்- மூலம் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இறைவன் நேரடியாகப் பேசுவது சிறந்ததா? தூதர் வழியாக பேசுவது சிறந்ததா?

சித்தீக்

பதில்: 

இறவனைப் பொருத்தவரை இரண்டுமே சமமானவை தான். மனிதர்களாகிய நாம் ஒரு செய்தியை நேரடியாகச் சொல்லும் போது நாம் என்ன நினைக்கிறோமோ அப்படியே சொல்ல முடியும். ஆனால் ஒரு தூதர் மூலம் நாம் ஒரு செய்தியைச் சொல்லி அனுப்பும் போது நாம் நினைத்ததற்கு மாற்றமான கருத்தைக் கூட தூதர் சொல்லி விட வாய்ப்பு உள்ளது. எனவே மனிதர்களைப் பொருத்தவரை நேரில் சொல்வதற்கும், சொல்லி அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது.

ஆனால் இறைவனுக்கு இந்த நிலை இல்லை. அவன் எதை நினைக்கிறானோ அதை அவனே சொன்னாலும் எந்த மாற்றமும் இல்லாமல் அந்தச் செய்தி சென்றடையும். அது போல் வானவர் என்ற தூதர் மூலம் சொல்லி அனுப்பினாலும் அது உள்ளது உள்ளபடி வந்து சேர்ந்து விடும். எனவே இறைவனைப் பொருத்தவரை இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.

இது பற்றி பின்வரும் வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனதுவிருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்தமனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர் ஆன் 42:51

மேற்கண்ட மூன்று வழிகளில் எந்த வழியிலும் இறைவன் பேசுவான். அனைத்தும் சமமானவை தான்.

Leave a Reply