ஓரிரு நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?
இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيَّ اعْتِكَافُ يَوْمٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَمَرَهُ أَنْ يَفِيَ بِهِ رواه البخاري
நாஃபிவு அவர்கள் கூறுகிறார்கள் :
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில், ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
நூல் : புகாரி 3144
எனவே ஓரிரு நாட்கள் இஃதிகாஃப் இருப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்கம் தான்.