கஃபாவிற்குள் தொழலாமா?

கஃபாவிற்குள் தொழலாமா?

ஃபாவிற்குள் தொழலாமா? அப்படி தொழுதால் கிப்லா எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்?

எம்.எஸ்.நளீர்

பதில் :  

கஅபாவிற்குள் தொழுவதை மார்க்கம் தடைசெய்யவில்லை. மக்கள் குறைவாக இருந்த காலத்தில் கஅபாவின் உட்பகுதி தொழுகை நடத்தப்படும் பள்ளிவாசலாகத் தான் இருந்தது. அதற்குள் மக்கள் தொழுது வந்தனர்.

கஅபாவிற்குள் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் சிதிலமடைந்த கஅபாவின் அஸ்திவாரத்திலிருந்து சுவர்களை எழுப்பி அதைப் பள்ளியாக ஆக்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் சென்று தொழுதுள்ளார்கள். அப்போது அவர்கள் கஅபாவின் வாசலுக்கு எதிரே இருக்கும் சுவரை நோக்கி நின்று தொழுதார்கள்.

4400حَدَّثَنِي مُحَمَّدٌ حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ حَدَّثَنَا فُلَيْحٌ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ وَهُوَ مُرْدِفٌ أُسَامَةَ عَلَى الْقَصْوَاءِ وَمَعَهُ بِلَالٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ حَتَّى أَنَاخَ عِنْدَ الْبَيْتِ ثُمَّ قَالَ لِعُثْمَانَ ائْتِنَا بِالْمِفْتَاحِ فَجَاءَهُ بِالْمِفْتَاحِ فَفَتَحَ لَهُ الْبَابَ فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُسَامَةُ وَبِلَالٌ وَعُثْمَانُ ثُمَّ أَغْلَقُوا عَلَيْهِمْ الْبَابَ فَمَكَثَ نَهَارًا طَوِيلًا ثُمَّ خَرَجَ وَابْتَدَرَ النَّاسُ الدُّخُولَ فَسَبَقْتُهُمْ فَوَجَدْتُ بِلَالًا قَائِمًا مِنْ وَرَاءِ الْبَابِ فَقُلْتُ لَهُ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ صَلَّى بَيْنَ ذَيْنِكَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ وَكَانَ الْبَيْتُ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ سَطْرَيْنِ صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ مِنْ السَّطْرِ الْمُقَدَّمِ وَجَعَلَ بَابَ الْبَيْتِ خَلْفَ ظَهْرِهِ وَاسْتَقْبَلَ بِوَجْهِهِ الَّذِي يَسْتَقْبِلُكَ حِينَ تَلِجُ الْبَيْتَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى وَعِنْدَ الْمَكَانِ الَّذِي صَلَّى فِيهِ مَرْمَرَةٌ حَمْرَاءُ رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஸ்வா' எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (கஅபாவின்) சாவியை எம்மிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் (பின் தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக்கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு (உள்ளே நுழைந்து) விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?'' என்று கேட்டேன். அவர்கள், "அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்'' என்று சொன்னார்கள். அப்போது கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரு தூண்களுக்கிடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும், உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால் (ரலி) அவர்களிடம், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?'' என்று கேட்க மறந்துவிட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது.

நூல் : புகாரி 4400

எனவே மார்க்கச் சட்ட அடிப்படையில் பார்த்தால் கஅபாவிற்குள் சென்று தொழுவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் இன்றைக்கு மக்கள் பெருங்கூட்டமாக கஅபாவிற்கு வருகை தருகிறார்கள். கஅபாவுக்கு அருகில் செல்வது கூட முடியாத காரியமாகி விட்டது.

இந்நிலையில் கஅபாவைத் திறந்துவிட்டால் ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு உள்ளே நுழைய முற்படுவார்கள். பல வகையான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதனால் அரசாங்கம் கஃஅபாவிற்கு உள்ளே யாரும் செல்ல முடியாதவாறு அதன் வாயிலை அடைத்துள்ளது. எனவே கஅபாவிற்கு உள்ளே சென்று தொழும் வாய்ப்பு தற்போது அங்கு செல்லும் மக்களுக்கு இல்லை.

Leave a Reply