காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?

காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?

சாதிக்

மார்க்கத்தில் குர்பானிப் பிராணிகளுக்கான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அகீகாவுக்கான பிராணிகளுக்கு தனியாகச் சட்டம் எதுவும் கூறப்படவில்லை. குர்பானியும், அகீகாவும் அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் வணக்கம் என்பதால் குர்பானிப் பிராணிகளை போல் அகீகா பிராணியும் இருப்பதே சிறந்ததாகும்.

காயடிக்கப்பட்ட பிராணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார்.

இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத் தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம். அது போல் அகீகாவும் கொடுக்கலாம்.

24.08.2011. 17:46 PM

Leave a Reply