கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?

கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?

மேற்குத் திசை நோக்கி கால் நீட்டித் தூங்கலாமா?

சிலர் கிப்லாவை நோக்கி கால்நீட்டி தூங்கக் கூடாது என்கிறார்கள். எந்த்த் திசை நோக்கி தூங்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த்த் திசை நோக்கி தூங்கினார்கள் என்று ஹதீஸ் ஏதேனும் உள்ளதா?

நிஷாத்

பதில் :

மேற்குத் திசை நோக்கி காலை நீட்டக்கூடாது என்று முஸ்லிம்களில் அதிகமானோர் நம்புகின்றனர். கஅபா ஆலயம் மேற்குத் திசை நோக்கி அமைந்திருப்பதால் அதை நோக்கி கால் நீட்டுவது கஅபாவை அவமதிக்கும் செயல் என்று கருதுகின்றனர்.

கஅபாவை நோக்கி கால் நீட்டக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்கி தொழுதால் அது அழகிய முறையாக இருக்கும் என்பதற்காகத் தான் கஅபாவை நோக்கித் தொழுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

கிப்லாவை நோக்கி என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

தொழுகையில் கிப்லாவை நாம் முன்னோக்க வேண்டும்.

தொழுகும் போது கிப்லாவை நோக்கி எச்சில் துப்பக்கூடாது.

அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

صحيح البخاري

408 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا سَعِيدٍ حَدَّثَاهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي جِدَارِ المَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا، فَقَالَ: «إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلاَ عَنْ يَمِينِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் (கிப்லாத் திசை) சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பிறகு, உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே (கிப்லாத் திசையில்) உமிழ வேண்டாம்; வலப் புறத்திலும் உமிழ வேண்டாம். இடப் புறமோ, பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி: 408

மலம் ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கக்கூடாது. பின்னோக்கக்கூடாது.

صحيح مسلم

629 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ سَلْمَانَ قَالَ قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ -صلى الله عليه وسلم- كُلَّ شَىْءٍ حَتَّى الْخِرَاءَةَ. قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِىَ بِالْيَمِينِ أَوْ أَنْ نَسْتَنْجِىَ بِأَقَلَّ مِنْ ثَلاَثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِىَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ.

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்) என்று கேட்கப்பட்டது. அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மைதான்); மல ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும், கெட்டிச் சாணத்தாலோ, எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களைத்  தடுத்தார்கள் என்று கூறினார்கள்

நூல் : முஸ்லிம்

இந்த விதிமுறைகளை மட்டும் தான் கிப்லா விஷயத்தில் மார்க்கம் கூறுகின்றது. கிப்லாவை நோக்கி கால்களை நீட்டக்கூடாது என்று மார்க்கச் சட்டம் இருக்குமேயானால் அது குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்பட்டிருக்கும். கிப்லவை நோக்கி கால் நீட்டக்கூடாது என்று எந்த ஆதாரமும் இல்லை.

தூங்கும் போது ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்க வேண்டும் என்றோ, ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்கக்கூடாது என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எந்த்த் திசை வசதியாக இருக்கின்றதோ அந்த திசையை நோக்கி உறங்கிக் கொள்ளலாம்.

உறங்குபவர் உறங்கத் துவங்கும் போது வலப்புறமாக ஒருக்களித்து படுக்க வேண்டும் என்பதை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

247 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ رواه البخاري

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும், அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும், உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் நபியை நான் நம்பினேன். என்று பிராத்தித்துக் கொள்! அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகி விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!

நூல் : புகாரி 247

626 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالْأُولَى مِنْ صَلَاةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ بَعْدَ أَنْ يَسْتَبِينَ الْفَجْرُ ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلْإِقَامَةِ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும், ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்வதற்காக தம்மிடம் முஅத்தின் வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.

நூல் : புகாரி 626

30.03.2010. 18:06 PM

Leave a Reply