சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா?

சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா?

னது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான். (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முட்டுக்கால் தெரிகிறது) இப்படிச் செய்வது சரியா?  ஆடை அணிவதன் முறையை விளக்கவும்.

ஹஸன் முஹம்மது

பதில்

ஆண்கள் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூச் செய்வதோ, சாப்பிடுவதோ தவறல்ல. இவற்றைச் செய்யும் போது முட்டுக்கால் மறைக்கப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கட்டளையிடவில்லை.

இவை தவிர இதர நேரங்களிலும் கூட ஆண்கள் முட்டுக்கால்களை மறைக்க வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் அபூபக்ர் (ரலி) அவர்களின் முட்டுக்கால் தெரிந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அதைக் கண்டிக்கவில்லை.

صحيح البخاري

3661 – حَدَّثَنِي هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَائِذِ اللَّهِ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ أَقْبَلَ أَبُو بَكْرٍ آخِذًا بِطَرَفِ ثَوْبِهِ حَتَّى أَبْدَى عَنْ رُكْبَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا صَاحِبُكُمْ فَقَدْ غَامَرَ» فَسَلَّمَ وَقَالَ: إِنِّي كَانَ بَيْنِي وَبَيْنَ ابْنِ الخَطَّابِ شَيْءٌ، فَأَسْرَعْتُ إِلَيْهِ ثُمَّ نَدِمْتُ، فَسَأَلْتُهُ أَنْ يَغْفِرَ لِي فَأَبَى عَلَيَّ، فَأَقْبَلْتُ إِلَيْكَ، فَقَالَ: «يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ» ثَلاَثًا، ثُمَّ إِنَّ عُمَرَ نَدِمَ، فَأَتَى مَنْزِلَ أَبِي بَكْرٍ، فَسَأَلَ: أَثَّمَ أَبُو بَكْرٍ؟ فَقَالُوا: لاَ، فَأَتَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ، فَجَعَلَ وَجْهُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَمَعَّرُ، حَتَّى أَشْفَقَ أَبُو بَكْرٍ، فَجَثَا عَلَى رُكْبَتَيْهِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ أَنَا كُنْتُ أَظْلَمَ، مَرَّتَيْنِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ بَعَثَنِي إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ، وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ، وَوَاسَانِي بِنَفْسِهِ وَمَالِهِ، فَهَلْ أَنْتُمْ تَارِكُوا لِي صَاحِبِي» مَرَّتَيْنِ، فَمَا أُوذِيَ بَعْدَهَا

3661 அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முட்டுக்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார்'' என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிகள் நாயகம் -ஸல்- அவர்களுக்கு) ஸலாம் கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும், கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்'' என்று சொன்னார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, "அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?'' என்று கேட்க வீட்டார், "இல்லை'' என்று பதிலளித்தார்கள். ஆகவே, அவர்கள் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முட்டுக்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்.'' என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். "நீர் பொய் சொல்கிறீர்' என்று (என்னிடம்) நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, "நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று (என்னிடம்) கூறினார்; மேலும் தன்னையும், தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?'' என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

நூல் : புகாரீ 3661

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்கள் முன்னிலையில் முட்டுக்கால்கள் தெரிய அமர்ந்திருக்கிறார்கள்.

صحيح البخاري

3695 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي بِحِفْظِ بَابِ الحَائِطِ، فَجَاءَ رَجُلٌ يَسْتَأْذِنُ [ص:14]، فَقَالَ: «ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ»، فَإِذَا أَبُو بَكْرٍ ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ، فَقَالَ: «ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ»، فَإِذَا عُمَرُ، ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ فَسَكَتَ هُنَيْهَةً ثُمَّ قَالَ: «ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى سَتُصِيبُهُ»، فَإِذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ قَالَ حَمَّادٌ، وَحَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، وَعَلِيُّ بْنُ الحَكَمِ، سَمِعَا أَبَا عُثْمَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى، بِنَحْوِهِ وَزَادَ فِيهِ عَاصِمٌ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ قَاعِدًا فِي مَكَانٍ فِيهِ مَاءٌ، قَدِ انْكَشَفَ عَنْ رُكْبَتَيْهِ أَوْ رُكْبَتِهِ، فَلَمَّا دَخَلَ عُثْمَانُ غَطَّاهَا»

3695 அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அம்மனிதர் அபூபக்ர் அவர்களாக இருந்தார்கள். பிறகு மற்றொருவர் வந்து அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அந்த மனிதர் உமர் அவர்களாக இருந்தார்கள். பிறகு, இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்து விட்டு பிறகு, அவருக்கு அனுமதி கொடுங்கள்; (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அவர் உஸ்மான் பின் அஃப்பான் அவர்களாக இருந்தார்கள்.

இதே போன்று இன்னோர் அறிவிப்பும் வந்துள்ளது. அதில் ஆஸிம் அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மிரு முட்டுக்கால்களும் தெரிய தண்ணீர் உள்ள இடத்திற்கருகே அமர்ந்திருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்த போது தம் முட்டுக்காலை மூடிக் கொண்டார்கள் என்பதை அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.

புகாரி 3695

Leave a Reply