தாயின் காலடியில் சுவர்க்கமா?
தாயின் காலடியில் சொர்க்கம் என நபிகளார் சொன்னதாக வரும் செய்தி உண்மையானது தானா?
ஆய்வு: எம்.ஐ.சுலைமான்
இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அதில் ஒன்றுகூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.
3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا رواه النسائي
ஜாஹிமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவர்களை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் சொர்க்கம் அவளின் (தாயின்) பாதங்களுக்குக் கீழ் உள்ளது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஜாஹிமா
நூல் : நஸாயீ
இதே செய்தி
இப்னுமாஜா (2771),
ஷுஅபுல் ஈமான்-பைஹகீ, பாகம்:16, பக்கம் :340,341,
முஃஜமுல் கபீர்- தப்ரானீ, பாகம்:2, பக்கம் : 418,
ஹாகிம் 2502,7248,
ஸுனஸ் ஸுக்ரா – நஸாயீ (3067),
மஃரிபத்துஸ் ஸஹாபா அபூ நுஐம் உஸ்பஹானீ (5494)
ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட நூல்களில்
முஃஜமுல் கபீர்- தப்ரானீ,
மஃரிபத்துஸ் ஸஹாபா- அபூநுஐம் உஸ்பஹானீ
ஆகிய இரு நூல்களைத் தவிர மற்ற அனைத்து நூல்களிலும் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்ற தமது நூலில் இவரைப் பதிவு செய்துள்ளார்கள்.
ஒருவரை யாரும் குறை கூறவில்லையானால் அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பது இப்னு ஹிப்பானின் வழக்கமாகும். அவரின் வழக்கமாகும். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் பலவீனமானவராகிறார்.
முஃஜமுல் கபீர்- தப்ரானீ, பாகம்:2, பக்கம் : 418
மஃரிபத்துஸ் ஸஹாபா- அபூநுஐம் உஸ்பஹானீ (5494)
ஆகிய இரு நூல்களில் மட்டும் தல்ஹாவின் தந்தை பெயர் மாற்றமாக இடம்பெற்றுள்ளது. இவரின் தந்தையின் பெயர் யஸீத் பின் ருகானா என்று இடம்பெற்றுள்ளது.
யஸீத் பின் ருகானா என்பவரின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் நம்பகமானவரார்.
இந்தச் செய்தியில் இடம்பெற்றிருப்பவர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகனா? அல்லது யஸீத் பின் ருகானா என்பவரின் மகனா?
பெரும்பாலான நபிமொழி தொகுப்புகளில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே இதில் யாரோ ஒரு அறிவிப்பாளர் தந்தையின் பெயரைத் தவறாக இடம் பெறச் செய்திருக்க வேண்டும்.
யஸீத் பின் ருகானா என்பவரின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்று வைத்துக் கொண்டாலும் அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் முஆவியா பின் ஜாஹிமா என்பவர் நபித்தோழரா? அல்லது தாபியீயா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இதில் அவர் தாபியீ என்பதே சரியானது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :10, பக்கம்: 183)
அடுத்து அந்தச் செய்தியில் இடம்பெற்றிருக்கும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் செய்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.
عن يحيى بن سعيد كان بن جريج صدوقا فإذا قال حدثني فهو سماع وإذا قال أخبرني فهو قراءة وإذا قال قال فهو شبه الريح تهذيب التهذيب ابن حجر 6 /359
இப்னு ஜுரைஜ் நல்லவர். (எனினும்) அவர் حَدَّثَنِيْ என்று கூறினால் அவர் நேரடியாகக் கேட்டதாகும். أَخْبرَنِيْ என்று சொன்னால் ஆசிரியர் படிக்க அவர் கேட்டதாகும். அவர் قَالَ قَالَ என்று சொன்னால் அது காற்றுக்கு ஒப்பானதாகும். (மதிப்பற்றதாகும்) என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறினார்கள்.
(நூல்:தஹ்தீபுத் தஹ்தீப்,பாகம் :6, பக்கம் :359)
وقال الدارقطني تجنب تدليس بن جريج فإنه قبيح التدليس تهذيب التهذيب ابن حجر
இப்னு ஜுரைஜின் தத்லீஸை விட்டும் தவிர்ந்து கொள். ஏனெனில் அவர் தத்லீஸ் செய்வதில் மோசமானவர் என்று இமாம் தாரகுத்னீ குறிப்பிட்டார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :6, பக்கம் :359)
وقال الذهلي وابن جريج إذا قال حدثني وسمعت فهو محتج بحديثه تهذيب التهذيب ابن حجر 6 /359
இப்னு ஜுரைஜ் حَدَّثَنِيْ سَمِعْتُ ( எனக்கு அறிவித்தார்; அல்லது நான் அவரிடம் கேட்டேன்) என்று கூறினால் அந்த ஹதீஸ் ஆதாரத்திற்கு ஏற்றதாகும் என்று துஹ்லீ அவர்கள் கூறினார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :6, பக்கம் :359)
தான் யாரிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டாரோ அவரை விட்டுவிட்டு அடுத்த அறிவிப்பாளரை அறிவிக்கும் நபரை ஹதீஸ் துறையில் தத்லீஸ் செய்பவர்கள் என்று கூறுவார்கள். இவரின் ஹதீஸ்கள் முழுமையாக மறுக்கப்படாது. எந்தச் செய்தியில் தத்லீஸ் செய்துள்ளாரோ அந்தச் செய்தி மட்டும் மறுக்கப்படும். எந்தச் செய்தியில் நேரடியாகக் கேட்டதாக தெளிவான வாசகத்தைக் கொண்டு கூறுவாரோ அந்தச் செய்தி ஏற்றுக் கொள்ளப்படும்.
புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களிலும் இப்னு ஜுரைஜ் இடம்பெற்றுள்ளார். ஆனால் அந்தச் செய்திகளில் நேடியாக கேட்டதாக سمعت أخبرني حدثني போன்ற சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். عن قال أنّ போன்ற சொற்பிரயோகங்கள் இருந்தால் அவர் நேரடியாகக் கேட்கவில்லை என்பது பொருளாகும். இந்தச் சொற்பிரயோகங்கள் இடம் பெற்றிருக்கும் செய்திகள் பலவீனமானதாக கருத்தப்படும்.
நாம் ஆய்வு செய்யும் செய்தியிலும் عن என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்த செய்தி பலவீனமடைகிறது.
இதே நேரத்தில் மற்ற நூல்களில் இடம்பெறும் செய்தியில் இப்னுஜுரைஜ் தமக்கு அடுத்த அறிவிப்பாளிடமிருந்து அறிவிக்கும் போது أخبرني எனக்கு அறிவித்தார் என்று தெளிவாக கூறியிருக்கிறார். அந்த செய்தியில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்றே இடம்பெற்றுள்ளது. எனவே யஸீத் பின் ருகானா என்பவரின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்ற இடம்பெறும் செய்தி பலவீனமானது என்பது உறுதியாகிறது.
மேலும் தாயின் கலாடியில் சொர்க்கம் உள்ளது என்று வரும் செய்தியின் அறிவிப்பாளர் வரிசைகள் பல குளறுபடிகளும் உள்ளது. இந்த குளறுபடிகளை இமாம் தாரகுத்னீ அவர்கள் தனது இலல் என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இந்தச் செய்தி ஜாஹிமா (ரலி) அவர்கள் வழியாகவே வந்துள்ளது. இதில் சில அறிவிப்புகள் ஜாஹிமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாகவும், சில அறிவிப்புகள் அவரின் மகன் முஆவியா பின் ஜாஹிமா அறிவிப்பதாகவும் உள்ளது.
சில அறிவிப்புகளில் முஹம்மத் பின் தல்ஹா என்பவரின் தந்தை அப்துல்லாஹ் என்றும் சில அறிவிப்புகளில் யஸீத் என்றும் இடம்பெற்றுள்ளது.
இச்செய்தியின் அறிவிப்பாளர் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் சில அறிவிப்புகளில் நேரடியாக முஆவியா பின் ஜாஹிமா அவர்களிடம் கேட்டதாகவும், சில அறிவிப்புகளில் தன் தந்தையிடம் கேட்டு அவர் முஆவியா பின் ஜாஹிமாவிடம் கேட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பல குளறுபடிகள் இந்தச் செய்தியில் இருப்பதால் பலவீனத்திற்கு மேல் இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்பது தொடர்பாக வரும் மற்றொரு
செய்தி இதோ :
113 أخبرنا أبو علي الحسن بن خلف الواسطي ، ثنا عمر بن أحمد بن شاهين ، ثنا عبد الواحد بن المهتدي بالله بن الواثق بالله ، ثنا علي بن إبراهيم الواسطي ، ثنا منصور بن المهاجر ، عن أبي النضر الأبار ، عن أنس بن مالك ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : الجنة تحت أقدام الأمهات مسند الشهاب القضاعي 1 /189
தாய்மார்களின் பாதங்களுக்குக் கீழ் சொர்க்கம் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்:முஸ்னத் ஷிஹாப் (113)
இதே செய்தி அபூஷைக் அல்உஸ்பஹானீ அவர்களுக்குரிய அல்பவாயித் (ஹதீஸ் எண் : 25), இதே ஆசிரியரின் தபாத்துல் முகத்திஸீன், பாகம் :4, பக்கம்: 19 ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
இச்செய்தியில் இடம்பெறும் மன்சூர் பின் முஹாஜிர், அபுந் நள்ர் அல்அபார் என்ற இருவரும் யாரென அறியப்படாதவர்கள். இவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
منصور بن مهاجر عن النضر الأبار ( عن أنس ) قال ابن طاهر : ومنصور وأبو النضر لا يعرفان والحديث منكر فيض القدير شرح الجامع الصغير
மன்சூர், அபுந் நள்ர் என்ற இருவரும் யாரென அறிப்படாதவர்கள். இந்தச் செய்தி மறுப்படவேண்டியதாகும் என்று இப்னு தாஹிர் என்பவர் குறிப்பிடுகிறார்.
நூல் : பைளுள் கதீர், பாகம் :1, பக்கம் :361
இதைப் போன்று இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இப்னு அதீ அவர்களின் அல்காமில் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ثنا عمر بن سنان ثنا عباس بن الوليد الخلال ثنا موسى بن محمد بن عطاء ثنا أبو المليح عن ميمون بن مهران عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم الجنة تحت أقدام الأمهات من شئن أدجلن ومن شئن أخرجن قال الشيخ وهذا حديث منكر أيضا
இந்தச் செய்தியில் மூஸா பின் முஹம்மத் பின் அதா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பொய்யர் என்று கடுமையாக குற்றம் சாட்டப்பட்டவராவார்.
كذبه أبو زرعة، وأبو حاتم. وقال النسائي: ليس بثقة. وقال الدارقطني وغيره: متروك ميزان الاعتدال الذهبي
இவரை பொய்யர் என்று அபூஸுர்ஆ அவர்களும் அபூஹாத்திம் அவர்களும் கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் அல்ல என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்கள். தாரகுத்னீ மற்றும் இவரல்லாதவர்களும் இவர் விடப்படவேண்டியவர் என்று கூறியுள்ளார்கள்.
(நூல் : மீஸானுல் இஃதிதால் ,பாகம் :4, பக்கம் :219)
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று வரும் அனைத்து செய்திகளும் ஆதாரமற்றதாகவே உள்ளது. அதே நேரத்தில் தாயின் சிறப்பை உணர்த்தும் திருக்குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. அவை இடம் பெறும் விவரங்கள் சில இதோ :
திருக்குர்ஆன் 31:14, 46:15 புகாரி 5971, 2761,2762
08.03.2016. 9:09 AM