துஆக்களின் தொகுப்பு
நூலின் பெயர் : துஆக்களின் தொகுப்பு
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
துஆக்களின் தொகுப்பு
இறைவனுக்காகச் செய்யும் வணக்கங்கள் மூலம் மட்டுமின்றி தனது வாழ்வில் மனிதன் செய்யும் அனைத்துக் காரியங்கள் மூலமும் இறைவனின் அன்பைப் பெற முடியும் என்பது இஸ்லாத்தின் போதனை.
எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அந்தக் காரியத்தில் ஈடுபடும் போது இறைவனின் நினைவுடன் ஈடுபட்டால் அதுவும் ஒரு வணக்கமாக அமைந்து விடும்.
எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் இறைவனை எவ்வாறு நினைவு கூர்வது? ஒவ்வொருவரும் தத்தமது விருப்பப்படி நினைவு கூர்ந்தால் அது வணக்கமாக அமையாது.
அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போது எவ்வாறு இறைவனை நினைவு கூர்ந்தார்களோ, எவ்வாறு இறைவனை வேண்டினார்களோ அந்த முறையில் நினைவு கூர்ந்தால் தான் அது வணக்கமாக அமையும்.
துஆக்கள், அவ்ராதுகள், திக்ருகள் என்ற தலைப்புக்களில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ள போதும் அவை பெரும்பாலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அமையவில்லை. சில நூல்கள் கற்பனையாக உருவாக்கப்பட்ட துஆக்களாக உள்ளன. எனவே இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆதாரப்பூர்வமான துஆக்களின் தொகுப்புக்களை வழங்குவதில் மன நிறைவு கொள்கிறோம்.
ஹிஸ்பு என்றும் கன்ஜுல் அர்ஷ் என்றும் இன்ன பிற பெயர்களிலும் மனிதக் கற்பனையில் உருவாக்கப்பட்டதைத் தவிர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாயால் மொழிந்த துஆக்களின் தொகுப்பே இந்த நூல்.
தூங்கும் போது
தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ
காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ
மாலையில் ஓதும் துஆ
காலையில் ஓதும் துஆ
தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை
தினமும் ஓத வேண்டிய துஆ
கழிவறையில் நுழையும் போது
கழிவறையிலிருந்து வெளியேறும் போது
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
சபையை முடிக்கும் போது
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
சாப்பிடும் போதும், பருகும் போதும்
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
உணவளித்தவருக்காக
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
கோபம் ஏற்படும் போது
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக்
குழப்பத்தின் போதும்
கழுதை கணைக்கும் போது
கெட்ட கனவு கண்டால்
நோயாளியை விசாரிக்கச் சென்றால்
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது
இழப்புகள் ஏற்படும் போது
கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது
மழை வேண்டும் போது
அளவுக்கு மேல் மழை பெய்தால்
மழை பொழியும் போது
போர்கள் மற்றும் கலவரத்தின் போது
புயல் வீசும் போது
பயணத்தின் போது
பயணத்திலிருந்து திரும்பும் போது
வெளியூரில் தங்கும் போது
பிராணிகளை அறுக்கும் போது
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும்
மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்
மேட்டில் ஏறும் போது
கீழே இறங்கும் போது
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய
தும்மல் வந்தால்
இறந்தவருக்காகச் செய்யும் துஆ
ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ
கப்ருகளை ஸியாரத் செய்யும் போது
இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது
மணமக்களை வாழ்த்த
நோன்பு துறந்தவுடன்
உளூச் செய்யத் துவங்கும் போது
உளூச் செய்து முடித்த பின்61
பாங்கு சப்தம் கேட்டால்
பாங்கு முடிந்தவுடன்
தொழுகையைத் துவக்கிய உடன்
ருகூவில் ஓத வேண்டியது
ருகூவில் மற்றொரு துஆ
ருகூவில் மற்றொரு துஆ
ருகூவிலிருந்து எழுந்த பின்
ருகூவிலிருந்து எழுந்த பின் மற்றொரு துஆ
ஸஜ்தாவில் ஓத வேண்டியது
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில்
இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டிய மற்றொரு துஆ
தொழுகை இருப்பில் ஓத வேண்டியது
இருப்பில் ஓதும் மற்றொரு துஆ
தொழுகையில் ஓதும் ஸலவாத்
இருப்பில் ஓதும் கடைசி துஆ
கடமையான தொழுகை முடிந்த பின்
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்
தூங்கும் போது
بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
பி((B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6312
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
அல்லது
بِاسْمِكَ اَللّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا
பி(B]ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6324
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوْتُ
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து
ஆதாரம்: புகாரி 7394
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوْتُ
அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அஹ்யா வபி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து
ஆதாரம்: முஸ்லிம் 4886
அல்லது
بِاسْمِكَ نَمُوْتُ وَنَحْيَا
பி(B]ஸ்மி(க்)க நமூ(த்)து வனஹ்யா
ஆதாரம்: புகாரி 7395
என்றோ கூற வேண்டும்.
இதன் பொருள்:
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ
அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்[F]ஸீ, வஅந்(த்)த தவப்பா[F]ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா, வஇன் அமத்தஹா ப[F]ஃக்பி[F]ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி[F]யா
என்று ஓத வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4887
2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
அல்லாஹும்ம ரப்ப(B]ஸ் ஸமாவா(த்)தி வரப்ப(B]ல் அர்ளி, வரப்ப(B]ல் அர்ஷில் அளீம், ரப்ப(B]னா வரப்ப(B] குல்லி ஷையின், பா[F]லி(க்)கல் ஹப்பி(B] வன்னவா, வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீலி வல் பு[F]ர்கான், அவூது பி(B](க்)க மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பி(B]னாஸிய(த்)திஹி, அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ப[F]லைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் ஆஃகிரு ப[F]லைஸ ப(B]ஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ப[F]லைஸ ப[F]வ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பா(B]த்தினு ப[F]லைஸ தூன(க்)க ஷைவுன், இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ப[F]க்ரி
இதன் பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 4888
3, படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
بِاسْمِكَ رَبّ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ
பி(B]ஸ்மி(க்)க ரப்பீ[B], வளஃது ஜன்பீ(B] வபி(B](க்)க அர்ப[F]வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ர்ஹம்ஹாவஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபா(B]த(க்)கஸ் ஸாலிஹீன்.
இதன் பொருள்:
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: புகாரி5845
4, பி(B]ஸ்மில்லாஹ் எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்.
سُبْحَانَكَ اللّهُمَّ رَبّيْ بِكَ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ
ஸுப்(B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ[B], பி(B](க்)க வளஃது ஜன்பீ[B], வபி(B](க்)க அர்ப[F]வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ஃக்பி[F]ர் லஹா, வஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபாத(க்)கஸ் ஸாலிஹீன்.
இதன் பொருள்:
என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 4889
5, தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 3275
ஆய(த்)துல் குர்ஸீ வருமாறு:
اَللهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَئُوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ()
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா பி[F]ஸ்ஸமாவா(த்)தி வமா பி[F]ல் அர்ளி, மன் தல்லதீ யஷ்ப[F]வு இந்தஹு இல்லா பி(B] இத்னிஹி, யஃலமு மாபை(B]ன ஐதீஹிம் வமா ஃகல்ப[F]ஹும் வலாயுஹீ(த்)தூன பி(B]ஷையின் மின் இல்மிஹி இல்லா பி(B]மா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்[F]ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.
இதன் பொருள்:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.
(திருக்குர்ஆன் 2:255)
6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051
இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை இதை ஓதிக் கொள்ளலாம்.
அந்த வசனங்கள் வருமாறு:
آمَنَ الرَّسُوْلُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُوْنَ كُلٌّ آمَنَ بِااللهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوْا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ(285)لاَ يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
ஆமனர் ரஸுலு பி(B]மா உன்ஸில இலைஹி மின் ரப்பி(B]ஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பி(B]ல்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபி(B]ஹி, வருஸுலிஹி, லாநுப[F]ர்ரி(க்)கு பை(B]ன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுப்[F]ரான(க்)க ரப்ப(B]னா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிபு[F]ல்லாஹு நப்[F]ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸப(B]த். வஅலைஹா மக்தஸப(B]த். ரப்ப(B]னா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்ப(B]னா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்(B]லினா, ரப்ப(B]னா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பி(B]ஹி, வஃபு[F] அன்னா வஃக்பி[F]ர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ப[F]ன்ஸுர்னா அலல் கவ்மில் காபி[F]ரீன்.
இதன் பொருள்:
இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர். எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
(திருக்குர்ஆன் 2:285,286)
7, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள். ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319
அந்த அத்தியாயங்கள் வருமாறு:
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ هُوَ اللهُ أَحَدٌ (1)اَللهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ(4)
பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு[F]வன் அஹத்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ الْفَلَقِ (1)مِنْ شَرّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)
பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B] ரப்பி(B]ல் ப[F]லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(B]. வமின் ஷர்ரின் னப்ப[F]ஸாத்தி பி[F]ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!
113 வது அத்தியாயம்
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلهِ النَّاسِ (3)مِنْ شَرّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4)الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ(5)مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ(6)
பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பி(B]ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ[F] ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர்.
114வது அத்தியாயம்
8, நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர் வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 247, 6313, 6315, 7488, 6311, 7488
அந்த துஆ இது தான்.
اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப[F]வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(B](த்)தன் வரஹ்ப(B](த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(B](க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(B]நபி(B]ய்யிகல்லதீ அர்ஸல்(த்)த
இதன் பொருள்:
இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன்.
தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ
اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
இதன் பொருள்:
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ
1, காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77
اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B](க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி
இதன் பொருள்:
இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
2, காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: நஸயீ 5333
அந்த அத்தியாயங்கள் வருமாறு:
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ هُوَ اللهُ أَحَدٌ (1)اَللهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ(4)
பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு[F]வன் அஹத்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ الْفَلَقِ(1)مِنْ شَرّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)
பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B] ரப்பி(B]ல் ப[F]லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(B]. வமின் ஷர்ரின் னப்பா[F]ஸாத்தி பி[F]ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!
113 வது அத்தியாயம்
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلهِ النَّاسِ (3) مِنْ شَرّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ(5)مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ(6)
பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பி(B]ரப்பி(B]ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ[F] ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர். 114வது அத்தியாயம்
மாலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 4901
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ للهِ وَالْحَمْدُ للهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلّ شَيْءٍ قَدِيْرٌ رَبّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(B] அஸ்அலு(க்)க கைர மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(B]ஃதஹா, வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரி மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(B]ஃதஹா, ரப்பி(B] அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(B]ரி, ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அதாபி(B]ன் பி[F]ன்னாரி, வஅதாபி(B]ன் பி[F]ல் கப்(B]ரி
இதன் பொருள்:
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
காலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 4901
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ للهِ وَالْحَمْدُ للهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ رَبّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அஸ்ப(B]ஹ்னா வஅஸ்ப(B]ஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(B] அஸ்அலு(க்)க கைர மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(B]ஃதஹா, வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரி மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(B]ஃதஹா, ரப்பி(B] அவூது பி(B](க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(B]ரி, ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அதாபி(B]ன் பி[F]ன்னாரி, வஅதாபி(B]ன் பி[F]ல் கப்(B]ரி
இதன் பொருள்:
நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழ னைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடு கிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறை யின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.
ஆதாரம்: புகாரி 6317, 7429, 7442, 7499
اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் பீ[F]ஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபி(B]ய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(B](க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(B](த்)து, வபி(B](க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ப[F]க்பி[F]ர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி
இதன் பொருள்:
இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை
ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 1154
لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்(B]ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(B]ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி, அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.
தினமும் ஓத வேண்டிய துஆ
பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 3293
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
கழிவறையில் நுழையும் போது
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِث
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B](க்)க மினல் குபு(B]ஸி வல் கபா(B]யிஸி.
ஆதாரம்: புகாரி 6322
இதன் பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
கழிவறையிலிருந்து வெளியேறும் போது
غُفْرَانَكَ
ஃகுப்[F]ரான(க்)க
ஆதாரம்: திர்மிதீ 7
உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.
ஆதாரம்: நஸயீ 5391, 5444
بِسْمِ اللهِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி(B]ஸ்மில்லாஹி ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
இதன் பொருள்:
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதீ 3355
سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.
இதன் பொருள் :
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
ஸுப்(B]ஹான(க்)கல்லாஹும்ம வபி(B]ஹம்தி(க்)க அஸ்தக்பி[F]ரு(க்)க வ அதூபு(B] இலை(க்)க.
இதன் பொருள் வருமாறு:
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
ஆதாரம்: நஸயீ 1327
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப[F]ழ்ளி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 1165
சாப்பிடும் போதும், பருகும் போதும்
بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5376, 5378
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ[F] அவ்வலிஹி வ ஆகிரிஹி
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: திர்மிதீ 1781
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(B]ன் முபா(B]ர(க்)கன் பீ[F]ஹி ஃகைர மக்பி[F]ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B]னா
இதன் பொருள் :
தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.
ஆதாரம்: புகாரி 5858
அல்லது
اَلْحَمْدُ للهِ الَّذِيْ كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ர்
இதன் பொருள் :
உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல. ஆதாரம்: புகாரி 5459
அல்லது
اَلْحَمْدُ للهِ
அல்ஹம்து லில்லாஹ்
என்று கூறலாம்.
ஆதாரம்: முஸ்லிம் 4915
உணவளித்தவருக்காக
اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(B]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும்.
இதன் பொருள் :
இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396
அல்லது
بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
ஆதாரம்: புகாரி 5165, 3283
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்
بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 3280, 5623
கோபம் ஏற்படும் போது
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ
அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தான்
இதன் பொருள் :
ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 3282
அல்லது
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
என்று கூறலாம்.
ஆதாரம்: புகாரி 6115
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 3276
கழுதை கணைக்கும் போது
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 3303
கெட்ட கனவு கண்டால்
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 6995
நோயாளியை விசாரிக்கச் சென்றால்
اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.
இதன் பொருள் :
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5742
அல்லது
اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!
ஆதாரம்: புகாரி 6743
அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து
بِاسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்
என்று மூன்று தடவை கூறி விட்டு
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
அவூது பி(B]ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு
என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.
இதன் பொருள் :
நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4082
அல்லது
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ
லா ப(B]ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்
இதன் பொருள் :
கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்
எனக் கூறலாம்.
ஆதாரம்: புகாரி 3616
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப[F]னீ இதா கான(த்)தில் வபா[F](த்)து கைரன் லீ
இதன் பொருள் :
இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5671, 6351
இழப்புகள் ஏற்படும் போது
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 1525
إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F] முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா
இதன் பொருள் :
நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1525
கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது
اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَلَهُ وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبَى حَسَنَةً
அல்லாஹும்மக்பி[F]ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B]ன் ஹஸனதன்
இதன் பொருள் :
இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 1527
மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி
اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களுக்கு மழையைத் தா.
ஆதாரம்: புகாரி 1013
அல்லது
اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
எனக் கூற வேண்டும்.
பொருள்:
இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!
ஆதாரம்: புகாரி 1014
அளவுக்கு மேல் மழை பெய்தால்
اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!
ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
அல்லது
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B]லி வல் ஆஜாமி வள்ளிராபி(B] வல் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி
இதன் பொருள் :
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.
ஆதாரம்: புகாரி 1013, 1016
அல்லது
اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B]லி வல் ஆகாமி வபு(B]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி
ஆதாரம்: புகாரி 1017
மழை பொழியும் போது
اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்
இதன் பொருள் :
இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!
ஆதாரம்: புகாரி 1032
போர்கள் மற்றும் கலவரத்தின் போது
اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.
இதன் பொருள் :
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!
ஆதாரம்: புகாரி 2933, 4115
அல்லது
اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B] வமுஜ்ரியஸ் ஸஹாபி(B] வஹாஸிமல் அஹ்ஸாபி(B] இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.
இதன் பொருள் :
இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!
ஆதாரம்: புகாரி 2966, 3024
புயல் வீசும் போது
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி
இதன் பொருள் :
இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 1496
பயணத்தின் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் –
அல்லாஹு அக்ப(B]ர்
எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ
ஸுப்(B]ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B]னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ[F] ஸப[F]ரினா ஹாதா அல்பி(B]ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப[F]ரனா ஹாதா வத்வி அன்னா பு(B]ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B] பி[F]ஸ்ஸப[F]ரி வல் கலீப[F](த்)து பி[F]ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப[F]ரி வகாப (B]தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B] பி[F]ல் மாலி வல் அஹ்லி
எனக் கூறுவார்கள்.
இதன் பொருள் :
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
பயணத்திலிருந்து திரும்பும் போது
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبّنَا حَامِدُوْنَ
ஆயிபூ(B]ன தாயிபூ(B]ன ஆபி(B]தூன லிரப்பி(B]னா ஹாமிதூன்.
இதன் பொருள் :
எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
வெளியூரில் தங்கும் போது
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
அவூது பி(B] (க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்
இதன் பொருள் :
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882
பிராணிகளை அறுக்கும் போது
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது
بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B]ர்
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.
என்று கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5565, 7399
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்
மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்ப(B]ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 3348, 4741
மேட்டில் ஏறும் போது
உயரமான இடத்தில் ஏறும் போது
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்ப(B]ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 2993, 2994
கீழே இறங்கும் போது
உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது
سُبْحَانَ اللهِ
ஸுப்(B]ஹானல்லாஹ்
அல்லாஹ் தூயவன்.
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 2993, 2994
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான்.
ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390
اَللّهُمَّ إِنّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B]இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(B]குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப[F]ள்லி(க்)கல் அளீம். ப[F]இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B] அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ[F] தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B](த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப[F]க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B]ரிக் லீ பீ[F]ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ[F] தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B](த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப[F]ஸ்ரிப்[F]ஹு அன்னீ வஸ்ரிப்[F]னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ
இதன் பொருள் :
இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.
இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!
இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.
ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390
தும்மல் வந்தால்
தும்மல் வந்தால் தும்மிய பின்
اَلْحَمْدُ للهِ
அல்ஹம்து லில்லாஹ்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللهُ
யர்ஹமு(க்)கல்லாஹ்
எனக் கூற வேண்டும். இதன் பொருள் :
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(B]ல(க்)கும்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224
இறந்தவருக்காகச் செய்யும் துஆ
இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
اَللّهُمَّ اغْفِرْ لِ ………..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
அல்லாஹும்மக்பி[F]ர் லி ………………. வர்ப[F]ஃ தரஜ(த்)தஹு பி[F]ல் மஹ்திய்யீன வஃக்லுப்[F] ஹு பீ[F] அகிபி(B]ஹி பி[F]ல் காபிரீன் வக்பி[F]ர் லனா வலஹு யாரப்ப(B]ல் ஆலமீன் வப்[F]ஸஹ் லஹு பீ[F] கப்(B]ரிஹி வநவ்விர் லஹு பீ[F]ஹி.
இதன் பொருள் :
இறைவா! ………………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 1528
ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்மபி[F]ர் லஹு வர்ஹம்ஹு வஆபி[F]ஹி வபு[F] அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B]ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B]ல் அப்(B]யள மினத் தனஸி வ அப்(B]தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B]ல் கப்(B]ரி
இதன் பொருள் :
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 1600
கப்ருகளை ஸியாரத் செய்யும் போது
اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன்.
இதன் பொருள் :
இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. ஆதாரம்: முஸ்லிம் 367
அல்லது
اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَأَتَاكُمْ مَا تُوعَدُوْنَ غَدًا مُؤَجَّلُوْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன். ஆதாரம்: முஸ்லிம் 1618
அல்லது
اَلسَّلاَمُ عَلَى أَهْلِ الدّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللّهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلاَحِقُوْنَ
அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்லிமீன் வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B](க்)கும் லலாஹி(க்)கூன்.
இதன் பொருள் :
முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.
ஆதாரம்: முஸ்லிம் 1619
அல்லது
اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِينَْ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُوْنَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி[F]ய(த்)த
இதன் பொருள் :
முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 1620
இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது
اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
அல்லாஹும்மபி[F]ர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ
இதன் பொருள் :
இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 4863, 4864
மணமக்களை வாழ்த்த
بَارَكَ اللهُ لَكَ
பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க
ஆதாரம்: புகாரி 5367, 5155, 6386
அல்லது
بَارَكَ اللهُ عَلَيْكَ
பா(B]ர(க்)கல்லாஹு அலை(க்)க
ஆதாரம்: புகாரி 6387
அல்லது
بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ الْخَيْرِ
பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பி[F]ல் கைர்
ஆதாரம்: திர்மிதீ 1011
அல்லது
بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ خَيْرٍ
பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பீ[F] கைரின்
ஆதாரம்: அபூதாவூத் 1819
என்று மணமக்களை வாழ்த்தலாம்.
உளூச் செய்யத் துவங்கும் போது
بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹி
என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும்.
ஆதாரம்: நஸயீ 77
உளூச் செய்து முடித்த பின்
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு
இதன் பொருள் :
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 345
பாங்கு சப்தம் கேட்டால்
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 611
பாங்கு முடிந்தவுடன்
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும். (பக்கம் : 74-76-ல் ஸலவாத் இடம் பெற்றுள்ளது.)
اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப(B] ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப[F]ளீல(த்)த வப்(B]அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
இதன் பொருள் :
இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614, 4719
தொழுகையைத் துவக்கிய உடன்
அல்லாஹு அக்பர் என்று கூறி தொழுகையில் நுழைந்த உடன் அல்ஹம்து அத்தியாயம் ஓதுவதற்கு முன் கீழ்க் காணும் துஆவை ஓத வேண்டும்.
اَللّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اَللّهُمَّ نَقِّنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ اَللّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ
அல்லாஹும்ம பா(B]யித் பைனீ வபைன கதாயாய கமா பா(B]அத்த பை(B]னல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி[B], அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்பு[B]ல் அப்[B]யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பி[B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல் ப[B]ரதி
இதன் பொருள் :
இறைவா! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போல் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் என்னைப் பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.
ஆதாரம்: புகாரி 744
அல்லது
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِيْنَ إِنَّ صَلاَتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ للهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِيْنَ اَللّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبّيْ وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِيْ وَاعْتَرَفْتُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوبِيْ جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِيْ لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِيْ لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنّيْ سَيّئَهَا لاَ يَصْرِفُ عَنِّيْ سَيّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِيْ يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹிய லில்லதீ ப[F](த்)தரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீப[F]ன் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலா(த்)தீ, வநுஸு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பி[B]ல் ஆலமீன். லாஷ்ரீ(க்)க லஹு வபி[B]தாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்(த்)த ரப்பீ[B] வஅன அப்[B]து(க்)க ளலம்து நப்[F]ஸீ வஃதரப்[F](த்)து பிதன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீ துனூபீ[B] ஜமீஅன், இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லாயஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த வஸ்ரிஃப் அன்னீ ஸைய்யிஅஹா லா யஸ்ரிப்[F] அன்னீ ஸைய்யிஅஹா இல்லா அன்(த்)த லப்பை[B](க்)க வஸஃதை(க்)க வல் கைரு குல்லுஹு பீ[F] யதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி[B](க்)க வஇலை(க்)க தபா[B]ரக்த வதஆலை(த்)த அஸ்தஃக்பி[F]ரு(க்)க வஅதூபு[B] இலை(க்)க.
இதன் பொருள் :
வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்பி விட்டேன். கொள்கையில் உறுதி கொண்டவனாகவும், இணை கற்பிக்காதவனாகவும் இருக்கிறேன். எனது தொழுகை, எனது வணக்கங்கள், எனது வாழ்வு, எனது மரணம் அனைத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களில் ஒருவன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என் அதிபதி. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்கவோ, அழகிய குணங்களின் பால் வழிகாட்டவோ முடியாது. கெட்ட குணங்களை என்னை விட்டும் அகற்றி விடு! உன்னைத் தவிர யாரும் அதனை அகற்ற முடியாது. இதோ வந்து விட்டேன். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளது. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னைக் கொண்டே உதவி தேடுகிறேன். உன்னளவில் திரும்புகிறேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்டு உன்னளவில் திரும்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1290
ருகூவில் ஓத வேண்டியது
اَللّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعَظْمِيْ وَعَصَبِيْ
அல்லாஹும்ம ல(க்)க ர(க்)கஃ(த்)து வபி[B](க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து கஷஅ ல(க்)க ஸம்யீ வ ப[B]ஸரீ, வ முக்கீ வ அள்மீ வ அஸபீ[B]
இதன் பொருள் :
இறைவா! உனக்காக நான் ருகூவு செய்கிறேன். உன்னை நம்பினேன். உனக்குக் கட்டுப்பட்டேன். எனது செவியும், பார்வையும், மஜ்ஜையும், என் எலும்பும், என் நரம்பும் உனக்கே பணிந்தன.
ஆதாரம்: முஸ்லிம் 1290
ருகூவில் மற்றொரு துஆ
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ
இதன் பொருள் :
இறைவா! என் எஜமானே நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். இறைவா என்னை மன்னித்து விடு.
ஆதாரம்: புகாரி 794, 817, 4293, 4698, 4697
ருகூவில் மற்றொரு துஆ
سُبْحَانَ رَبّيَ الْعَظِيْمِ
ஸுப்[B]ஹான ரப்பி[B]யல் அளீம்.
இதன் பொருள் :
மகத்தான என் இறைவன் தூயவன்.
ஆதாரம்: அஹ்மத் 3334
ருகூவிலிருந்து எழுந்த பின்
اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவா(த்)தி வமில்அல் அர்ளி வமில்அ மாபை[B]னஹுமா வமில்அ மாஷிஃ(த்)த மின் ஷையின் ப[B]ஃது
இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும், மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு உனக்கே புகழனைத்தும்.
ருகூவிலிருந்து எழுந்த பின் மற்றொரு துஆ
اَللّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
அல்லாஹும்ம ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 795, 7346
அல்லது
رَبَّنَا وَلَكَ الْحَمْد
ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 689, 732, 734, 735, 738, 803, 804, 805, 1046, 1066, 1114, 4559
அல்லது
رَبَّنَا لَكَ الْحَمْدُ
ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 722, 733, 789
அல்லது
اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 796, 3228, 4560
ஸஜ்தாவில் ஓத வேண்டியது
سُبْحَانَ رَبّيَ الأَعْلَى
சுப்[B]ஹான ரப்பி[B]யல் அஃலா ஆதாரம்: அஹ்மத் 3334
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
اَللّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ
அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ[B] குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு
இதன் பொருள் :
இறைவா! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 745
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
اَللّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِيْ لِلَّذِيْ خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ
அல்லாஹும்ம ல(க்)க ஸஜத்து வபி[B](க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து ஸஜத வஜ்ஹீ லில்லதீ கல(க்)கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்அஹு வப[B]ஸரஹு தபா[B]ர(க்)கல்லாஹு அஹ்ஸனுல் காலி(க்)கீன்
இதன் பொருள் :
இறைவா! உனக்காக ஸஜ்தா செய்தேன். உன்னையே நம்பினேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து, வடிவமைத்து, செவிப்புலனையும் பார்வைப்புலனையும் அதில் அமைத்த இறைவனுக்கே என் முகம் பணிந்து விட்டது. அழகிய முறையில் படைக்கும் அல்லாஹ் பாக்கியம் மிக்கவன்.
ஆதாரம்: முஸ்லிம் 1290
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
اَللّهُمَّ أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ وَأَعُوْذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
அல்லாஹும்ம அவூது பி[B]ரிளா(க்)க மின் ஸகதி(க்)க வ பி[B]முஆபா[F](த்)தி(க்)க மின் உகூப[B](த்)தி(க்)க வஅவூது பி[B](க்)க மின்(க்)க லா உஹ்ஸீ ஸனாஅன் அலை(க்)க அன்(த்)த கமா அஸ்னை(த்)த அலா நப்[F]ஸி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.
ஆதாரம்: முஸ்லிம் 751
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ
இதன் பொருள் :
அல்லாஹ்வே எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன். இறைவா! என்னை மன்னித்து விடு.
ஆதாரம்: புகாரி 794, 817, 4293, 4968, 4967
இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில்
رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ
ரப்பிஃக்பி[F]ர்லீ ரப்பிஃக்பி[F]ர்லீ
இதன் பொருள் :
இறைவா என்னை மன்னித்து விடு! இறைவா என்னை மன்னித்து விடு!
ஆதாரம்: இப்னுமாஜா 887
இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டிய மற்றொரு துஆ
رَبِّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ
ரப்பிஃக்பி[F]ர்லீ வர்ஹம்னீ வஜ்பு[B]ர்னீ வர்ஸுக்னீ, வர்ப[F]ஃனீ
இதன் பொருள் :
இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்கு உணவளிப்பாயாக! என்னை உயர்த்துவாயாக!
ஆதாரம்: இப்னுமாஜா 888
தொழுகை இருப்பில் ஓத வேண்டியது
اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா[B](த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபி[B]ய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வப[B]ரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபா[B]தில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்[B]துஹு வரஸுலுஹு
இதன் பொருள் :
எல்லாவிதமான கன்னியங்களும், தொழுகைகளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இருப்பில் ஓதும் மற்றொரு துஆ
மேற்கண்ட அத்தஹியாத்தில் அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் னபிய்யு (நபியே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்பதற்கு பதிலாக
அஸ்ஸலாமு அலன்னபி[B]ய்யி
நபியின் மீது சாந்தி உண்டாகட்டும் என்று படர்க்கையாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறும் ஓதலாம்.
اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
ஆதாரம்: புகாரி 6365
தொழுகையில் ஓதும் ஸலவாத்
மேற்கண்ட அத்தஹியாத் ஓதிய பின் கீழ்க்காணும் ஸலவாத்களில் ஏதேனும் ஒன்றை ஓதலாம்.
اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
- அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம, வபா[B]ரிக் அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா பா[B]ரக்த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்
ஆதாரம்: புகாரி 3369
اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
- அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்[B]ராஹீம, வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.
ஆதாரம்: புகாரி 3370
اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
- அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.
ஆதாரம்: புகாரி 4797
اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ
- அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்[B]தி(க்)க வரஸுலி(க்)க கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம வபா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம்.
ஆதாரம்: புகாரி 4798, 6358
மேற்கண்ட ஸலவாத்களின் பொருள்:
இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன். இறைவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.
இருப்பில் ஓதும் கடைசி துஆ
அத்தஹியாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்கு பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதலாம்.
اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
- அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஹ்யா வபி[F]த்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி
இதன் பொருள் :
இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 833
اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّك أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
- அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நப்[F]ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த, ப[F]க்பி[F]ர்லீ மஃக்பி[F]ரதன் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கபூ[F]ருர் ரஹீம்.
இதன் பொருள் :
இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.
ஆதாரம்: புகாரி 834, 6326, 7388
اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
- அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்[F](த்)து அன்(த்)த அஃலமு பி[B]ஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த
இதன் பொருள் :
நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: திர்மிதீ 3343
கடமையான தொழுகை முடிந்த பின்
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ப[F]வு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்
இதன் பொருள் :
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.
ஆதாரம்: புகாரி 844, 6330
தொழுது முடித்தவுடன்
أَسْتَغْفِرُ اللهَ
அஸ்தஃக்பி[F]ருல்லாஹ்
(அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். பின்னர்
اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالاِكْرَامِ
அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபா[B]ரக்(த்)த தல் ஜலாலி வல் இக்ராம்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! நீயே சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமிக்கவன்.
ஆதாரம்: முஸ்லிம் 931
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் ஜுபு[B]னி வஅவூது பி[B](க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்னதித் துன்யா வஅவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி
இதன் பொருள் :
இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 2822
رَبّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
ரப்பி[B] கினீ அதாப[B](க்)க யவ்ம தப்[B]அஸு இபா[B]த(க்)க
இதன் பொருள் :
என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 1290
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
நாம் சந்திக்கின்ற எல்லாப் பிரச்சினைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சந்தித்துள்ளனர். அவற்றைச் சந்திக்கும் போது அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். அது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திக்கும் போது அந்தப் பிரார்த்தனைகளில் தகுதியானதைத் தேர்வு செய்யலாம்.
அந்தப் பிரார்த்தனைகளின் தமிழாக்கத்தைக் கவனித்து இதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.
اَللّهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَفِيْ بَصَرِيْ نُوْرًا وَفِيْ سَمْعِيْ نُوْرًا وَعَنْ يَمِينِيْ نُوْرًا وَعَنْ يَسَارِيْ نُوْرًا وَفَوْقِيْ نُوْرًا وَتَحْتِيْ نُوْرًا وَأَمَامِيْ نُوْرًا وَخَلْفِيْ نُوْرًا وَاجْعَلْ لِيْ نُوْرًا
- அல்லாஹும்மஜ்அல் பீ[F] கல்பீ[B] நூரன், வபீ[F] ப[B]ஸரீ நூரன், வபீ[F] ஸம்யீ நூரன், வஅன் யமீனீ நூரன், வஅன் யஸாரீ நூரன் வப[F]வ்கீ நூரன் வ(த்)தஹ்(த்)தீ நூரன் வஅமாமீ நூரன் வகல்பீ[F] நூரன் வஜ்அல் லீ நூரன்.
இதன் பொருள் :
இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!
ஆதாரம்: புகாரி 6316
اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
- அல்லாஹும்ம ரப்ப[B]னா ஆ(த்)தினா பி[F]த்துன்யா ஹஸன(த்)தன் வபி[F]ல் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாப[B]ன்னார்.
இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
ஆதாரம்: புகாரி 4522, 6389
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
- அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் பு[B]க்லி வல் ஜுபு[B]னி வளளஇத் தைனி வகலப[B](த்)திர் ரிஜால்
இதன் பொருள் :
இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 5425, 6369
رَبّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ كُلِّهِ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَعَمْدِيْ وَجَهْلِيْ وَهَزْلِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
- ரப்பிஃக்பி[F]ர்லீ கதீஅ(த்)தீ வஜஹ்லீ வஇஸ்ராபீ[F] பீ[F] அம்ரீ குல்லிஹி வமா அன்(த்)த அஃலமு பி[B]ஹி மின்னீ அல்லாஹும்மஃக்பி[F]ர் லீ கதாயாய வஅம்தீ வஜஹ்லீ வஹஸ்லீ வகுல்லு தாலி(க்)க இன்தீ அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு வஅன்(த்)த அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள் :
என் இறைவா! என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக. இறைவா! எனது தவறுகளையும், வேண்டுமென்று செய்ததையும், அறியாமையால் செய்ததையும், விளையாட்டாக செய்ததையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துப வன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.
ஆதாரம்: புகாரி 6398
اَللّهُمَّ مُصَرّفَ الْقُلُوْبِ صَرّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
- அல்லாஹும்ம முஸர்ரிப[F]ல் குலூபி[B] ஸர்ரிப்[F] குலூப[B]னா அலா தாஅ(த்)தி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 4798
اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اَللّهُمَّ إِنّي أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ أَنْتَ الْحَيُّ الَّذِي لاَ يَمُوْتُ وَالْجِنُّ وَالاِنْسُ يَمُوْتُوْنَ
- அல்லாஹும்ம லக அஸ்லம்(த்)து வபி[B](க்)க ஆமன்(த்)து வஅலை(க்)க தவக்கல்(த்)து வஇலை(க்)க அனப்[B](த்)து வபி[B](க்)க காஸம்(த்)து அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B]இஸ்ஸ(த்)தி(க்)க லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்துளில்லனீ அன்(த்)தல் ஹய்யுல்லதீ லாயமூ(த்)து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன.
இதன் பொருள் :
இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னிடமே திரும்பினேன். உன்னிடமே வழக்குரைக்கிறேன். இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கன்னியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தான் மர ணிக்காது உயிருடன் இருப்பவன். மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 4894
اَللّهُمَّ أَصْلِحْ لِيْ دِينِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ وَأَصْلِحْ لِيْ آخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِيْ فِيْ كُلّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِيْ مِنْ كُلّ شَرّ
- அல்லாஹும்ம அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்ம(த்)து அம்ரீ, வஅஸ்லிஹ் லீ துன்யாயல்ல(த்)தீ பீ[F]ஹா மஆஷீ, வஅஸ்லிஹ் லீ ஆகிர(த்)தியல்ல(த்)தீ பீ[F]ஹா மஆதீ வஜ்அலில் ஹயா(த்)த ஸியாத(த்)தன் லீ பீ[F] குல்லி கைரின் வஜ்அலில் மவ்(த்)த ராஹ(த்)தன் லீ மின் குல்லி ஷர்ரின்.
இதன் பொருள் :
இறைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக. நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக. எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு!
ஆதாரம்: முஸ்லிம் 4897
اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
- அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஹுதா வத்து(க்)கா வல் அபா[F]ப[F] வல்கினா
இதன் பொருள் :
இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4898
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اَللّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا
- அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுபு[B]னி வல்பு[B]க்லி வல்ஹரமி வஅதாபி[B]ல் கப்[B]ரி. அல்லாஹும்ம ஆ(த்)தி நப்[F]ஸீ தக்வாஹா வஸக்கிஹா அன்(த்)த கைரு மன் ஸக்காஹா அன்(த்)த வலிய்யுஹா வமவ் லாஹா, அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் இல்மின் லாயன்ப[F]வு வமின் கல்பி[B]ன் லாயக்ஷவு வமின் நப்[F]ஸின் லா தஷ்ப[B]வு வமின் தஃவ(த்)தின் லா யுஸ்(த்)தஜாபு[B] லஹா
இதன் பொருள் :
இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன். இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4899
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
- அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆபி[F]ய(த்)தி(க்)க வபு[F]ஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4922
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி 6309
அனைத்து துன்பங்களின் போதும் ஓத வேண்டியவை
அனைத்து வகையான துன்பங்களின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் துஆவை ஓதியுள்ளனர். (புகாரி 6345)
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் அளீம்.
அல்லது கீழ்க்காணும் துஆவை ஓதலாம்.
(புகாரி 6346)
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வரப்பு[B]ல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் கரீம்.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத் தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்
நபிமார்கள், நல்லடியார்கள் செய்த பல்வேறு துஆக்களை திருக்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான். அந்த துஆக்களை எந்தச் சந்தர்ப்பத்தில் ஓத வேண்டும் என்பதை அதன் பொருளை வைத்தே அறிந்து கொள்ளலாம். அந்த துஆ இடம் பெற்ற வசனத்தின் முன் பின் பகுதிகளைப் பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ(5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ(6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّيْنَ(7)
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
திருக்குர்ஆன் 1:57
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ(128)2
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:128
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ(201)2
எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
திருக் குர்ஆன் 2:201
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ(250)2
எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:250
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286)2
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:286
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (8)3
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
திருக் குர்ஆன் 3:8
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ(16)3
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
திருக் குர்ஆன் 3:16
اَللّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26)3
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக் குர்ஆன் 3:26
رَبّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ(38)3
இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்.
திருக் குர்ஆன் 3:38
رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ(53)3
எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!
திருக் குர்ஆன் 3:53
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ (147)3
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 3:147
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ(191)رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ (192)رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِيْ لِلاِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأَبْرَارِ(193)رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيْعَادَ(194)3
எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிருந்து எங்களைக் காப்பா யாக! எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவு படுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங் களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்று வாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில்1 எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய்.
திருக் குர்ஆன் 3:191, 192 193 194
رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ نَصِيْرًا(75)4
எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!
திருக் குர்ஆன் 4:75
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ(83)5
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!
திருக் குர்ஆன் 5:83
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ(23)7
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்.
திருக் குர்ஆன் 7:23
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِيْنَ(89)7
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 7:89
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِيْنَ (126)7
எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்ம்களாக மரணிக்கச் செய்வாயாக!
திருக் குர்ஆன் 7: 126
لَئِنْ لَمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(149)7
எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்கா விட்டால் நஷ்டமடைந்தோராவோம்.
திருக் குர்ஆன் 7:149
وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ (156)7
எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்.
திருக் குர்ஆன் 7:156
حَسْبِي اللهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(129)9
எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.
திருக் குர்ஆன் 9:129
عَلَى اللهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنْ الْقَوْمِ الْكَافِرِينَ (85,86)10
அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத் தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!.
திருக் குர்ஆன் 10:85, 86
بِاِسْمِ اللهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ(41)11
அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக் குர்ஆன் 11:41
فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنْتَ وَلِيّيْ فِي الدُّنْيَا وَالآخِرَةِ تَوَفَّنِيْ مُسْلِمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِينَ (101)12
வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ் வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்மாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!
திருக் குர்ஆன் 12:101
رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ(40)14
رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ(41)14
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
திருக் குர்ஆன் 14:40,41
رَبّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا (24)17
சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!
திருக் குர்ஆன் 17:24
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا(10)18
எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!
திருக் குர்ஆன் 18:10
رَبّ إِنِّيْ وَهَنَ الْعَظْمُ مِنِّيْ وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبّ شَقِيًّا(4) وَإِنِّيْ خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِيْ وَكَانَتْ امْرَأَتِيْ عَاقِرًا فَهَبْ لِيْ مِنْ لَدُنْكَ وَلِيًّا(5)19
என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாயாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!
திருக் குர்ஆன்19:4,5
رَبّ اشْرَحْ لِيْ صَدْرِيْ(25) وَيَسّرْ لِيْ أَمْرِيْ (26) وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِيْ (27) يَفْقَهُوْا قَوْلِيْ(28)20
என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
திருக் குர்ஆன் 20:25,26,27,28
رَبّ زِدْنِيْ عِلْمًا(114)20
என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து!
திருக் குர்ஆன் 20:114
أَنّيْ مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ (83)21
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்.
திருக் குர்ஆன் 21:83
لاَ إِلهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنتُ مِنْ الظَّالِمِيْنَ (87)21
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்.
திருக் குர்ஆன் 21:87
رَبّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ (89)21
என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்.
திருக் குர்ஆன் 21:89
رَبّ انصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ(26)23
என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 23:26
اَلْحَمْدُ للهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ (28)23
அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
திருக் குர்ஆன் 23:28
رَبّ أَنزِلْنِيْ مُنْزَلاً مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِيْنَ (29)23
என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 23:29
رَبّ انصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ(39)23
என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 23:39
رَبّ فَلاَ تَجْعَلْنِيْ فِي الْقَوْمِ الظَّالِمِيْنَ (94)23
என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!
திருக் குர்ஆன்23:94
رَبّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَات الشَّيَاطِيْنِ (97) وَأَعُوْذُ بِكَ رَبّ أَنْ يَحْضُرُوْنِ (98)23
என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
திருக் குர்ஆன் 23:97,98
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ(109)23
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 23:109
رَبّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ (118)23
என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 23:118
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا(65)25
எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனை யைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.
திருக் குர்ஆன் 25:65
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا(74)25
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிருந்தும், மக்களிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கு வாயாக!
திருக் குர்ஆன் 25:74
إِنَّا نَطْمَعُ أَنْ يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَنْ كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ(51)26
நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
திருக் குர்ஆன் 26:51
اَلَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ(78)وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ(79)وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ (80) وَالَّذِيْ يُمِيتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ (81)وَالَّذِيْ أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِيْ خَطِيئَتِيْ يَوْمَ الدّيْنِ(82)رَبّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ(83) وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الآخِرِيْنَ(84)وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ(85)وَاغْفِرْ لأَبِيْ إِنَّهُ كَانَ مِنَ الضَّالّيْنَ(86)وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ(87)26
அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான். தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசு களில் என்னையும் ஆக்குவாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவு படுத்தி விடாதே!
திருக் குர்ஆன் 26:78, 26:87
فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِيْ وَمَنْ مَعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ(118)26
எனக்கும் அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!
திருக் குர்ஆன் 26:118
رَبّ نَجّنِيْ وَأَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ (169)26
என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!
திருக் குர்ஆன் 26:169
اَلْحَمْدُ للهِ الَّذِيْ فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ(15)27
நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
திருக் குர்ஆன் 27:15
رَبّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِيْنَ(19)27
என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தி யடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!
திருக் குர்ஆன் 27:19
رَبّ إِنّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ (16)28
என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!
திருக் குர்ஆன் 28:16
رَبّ نَجّنِيْ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ(21)28
என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!
திருக் குர்ஆன் 28:21
رَبّ إِنّيْ لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ (24)28
என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன்.
திருக் குர்ஆன் 28:24
رَبّ انصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ (30)29
என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 29:30
رَبّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِينَ(100)37
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக!
திருக் குர்ஆன் 37:100
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإِ خْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالاِيمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاً لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ(10)59
எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக் குர்ஆன் 59:10
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188