நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?
ஜஸாகல்லாஹ் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா?
முஹம்மத் தரோஜ்
பதில்:
ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறலாம். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. இது பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதன் பிறகு உதவி செய்தவர் பாரகல்லாஹு கூற வேண்டும் என்ற கருத்து தவறானது. ஏனென்றால் இவ்வாறு கூற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை.