நபிகள் நாயகம் மகளுக்கு சீதனம் கொடுத்தார்களா?

நபிகள் நாயகம் மகளுக்கு சீதனம் கொடுத்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளின் திருமணத்தின் போது சில பாத்திரங்களைக் கொடுத்தார்கள் என்று ஹதீஸ் உள்ளதா?

உஸ்மான், துபை.

أخبرنا نصير بن الفرج قال حدثنا أبو أسامة عن زائدة قال حدثنا عطاء بن السائب عن أبيه عن علي رضي الله عنه قال جهز رسول الله صلى الله عليه وسلم فاطمة في خميل وقربة ووسادة حشوها إذخر

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவைத் திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்

பெற்ற மகளுக்கு நாமாக விரும்பி சில பொருட்களைக் கொடுக்கலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஆனால் விரும்பித் தரப்படுகிறதா அதில் நேரடியான மறைமுகமான நிர்பந்தம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

பார்க்க

விரும்பித் தருவது வரதட்சணையாகுமா?

28.10.2011. 14:03 PM

Leave a Reply