பள்ளிவாசல் கட்ட நிதி திரட்டுதல்
கேள்வி : தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசல்கள் கட்டுவதற்காக ஒவ்வொரு கிளையிலும் அட்வான்ஸ் என ஒரு தொகையைக் கொடுத்து விட்டு ,மீதமாக ஒரு பெரிய தொகைக்காக தங்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார்கள். மற்றவர்களிடம் சிரமப்பட்டு கோரிக்கை வைக்கிறார்கள். இது சரியா? இப்படிச் செய்யலாமா ?
முபாரக், ஈரோடு
பதில் :
நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனையில் நிர்பந்தத்திற்கு வேலை இல்லை. பேசிய தொகையைக் கொடுத்தால் இடத்தை தரப் போகிறார்கள். இல்லையென்றால் வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தரப்போகிறார்கள். இதில் நிர்பந்தம் எதுவும் இல்லை.
மக்களிடம் உதவி கேட்கும் பொறுப்பாளர்கள் சிரமப்பட்டு கோரிக்கை வைப்பதாகக் கூறினீர்கள். அல்லாஹ்வின் ஆலயத்தை எழுப்புவதற்காக வலியுறுத்தி உதவியைக் கேட்பது தவறல்ல. மாறாக நன்மையான விஷயமே. நல்ல விஷயத்துக்காக கோரிக்கை இருக்குமானால் அதில் தவறேதுமில்லை. இவ்வாறு உதவி தேடுபவர்கள் மக்களை நிர்பந்தப்படுத்துவதில்லை.
இப்பணிக்காகக் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவரது இஷ்டம். இதில் யாருடைய உரிமையும் பறிக்கப்படவில்லை. மார்க்கத்திற்கு மாற்றமான எந்த ஒரு அம்சமும் இதில் இல்லை. எனவே இதை நாம் தவறு என்று கூற முடியாது.
10.06.2010. 23:45 PM