பாங்குக்கு உளூ அவசியமா?

பாங்குக்கு உளூ அவசியமா?

டு, மாடுகளை அறுப்பதற்கும், பாங்கு சொல்வதற்கும் உளூச் செய்வது அவசியமா?

பதில்:-

ஆடு, மாடுகளை அறுப்பதற்கு உளூ அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம்.

பாங்கு சொல்வதற்கு உளூ அவசியம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள்  உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும். (பார்க்க : திர்மிதி 201,202)

பாங்குக்கு உளூ அவசியம் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை.

صحيح البخاري

611 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»

முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் அவர் சொல்வதைப் போல் நீங்களும் கூறுங்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் :அபூஸயீத் (ரலி)

நூல் : புகாரி 611

பாங்கு சொல்வதைக் கேட்பவர்கள் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கட்டளையிடுகின்றது. பாங்கைக் கேட்கக்கூடியவர்களில் சிலர் உளூவுடன் இருக்கக் கூடும் என்றாலும் அதிகமானவர்கள் உளூ இல்லாமல் தான் இருப்பார்கள். பாங்குக்கு உளூ அவசியம் என்றால் உளூ இல்லாதவர்கள் திருப்பிச் சொல்ல வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள். அப்படிச் சொல்லாததால் உளு உள்ளவர் மட்டுமின்றி உளு இல்லாதவரும் அதைத் திருப்பிச் சொல்ல வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்தே பாங்குக்கு உளூ அவசியமில்லை என்பதை அறியலாம்.

Leave a Reply