மூஸா நபியின் வேதத்தைப் படிக்கத் தடை ஏன்?

மூஸா நபியின் வேதத்தைப் படிக்கத் தடை ஏன்?

மர் (ரலி) அவர்கள் ஒரு முறை மூசாவைப் பின்பற்றும் யூதர்களின் வேதத்தில் நல்ல கருத்துக்கள் இருப்பதாகக் கருதி அதனை நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து படித்துக் காட்டிய போது நபிகள் நாயகத்திற்கு கடும் கோபம் வந்ததாகவும் மூசாவிற்கும் சேர்த்து நான் தான் நபி என உமர் அவர்களிடம் சொல்லி அந்த வேதத்தைப் படிக்க வேண்டாம் என் அறிவுறுத்தியதாகவும் ஹதீஸ் உள்ளது என அறிகிறேன். இவ்வாறு தடுக்கக் காரணம் என்ன?

முஹம்மத் பாரூக்

பதில்:

நீங்கள் குறிப்பிடும் செய்தி இப்னு மாஜா, அஹ்மது ஆகிய நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

436أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ عَنْ مُجَالِدٍ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنُسْخَةٍ مِنْ التَّوْرَاةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ نُسْخَةٌ مِنْ التَّوْرَاةِ فَسَكَتَ فَجَعَلَ يَقْرَأُ وَوَجْهُ رَسُولِ اللَّهِ يَتَغَيَّرُ فَقَالَ أَبُو بَكْرٍ ثَكِلَتْكَ الثَّوَاكِلُ مَا تَرَى مَا بِوَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَظَرَ عُمَرُ إِلَى وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِ اللَّهِ وَغَضَبِ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ بَدَا لَكُمْ مُوسَى فَاتَّبَعْتُمُوهُ وَتَرَكْتُمُونِي لَضَلَلْتُمْ عَنْ سَوَاءِ السَّبِيلِ وَلَوْ كَانَ حَيًّا وَأَدْرَكَ نُبُوَّتِي لَاتَّبَعَنِي رواه إبن ماجه

உமர் (ரலி) அவர்கள் தவ்ராத்தின் ஒரு பிரதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து படித்துக் காட்டினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”மூசா உங்களிடம் வந்து நீங்கள் என்னை விட்டு விட்டு அவரைப் பின்பற்றினால் நேரான பாதையை விட்டும் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். மூசா உயிருடன் இருந்தால் அவரும் என்னைத் தான் பின்பற்றுவார்

என்று மக்களிடம் கூறியதாக இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்தச் செய்தியில் முஜாலித் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

யஹ்யா பின் சயீத், அஹ்மது பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், புகாரி ஆகிய அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இது சரியான செய்தி இல்லை.

ஆயினும் அந்த வேதம் அல்லாஹ்வால் அருளப்பட்ட வடிவில் பாதுகாக்கப்படவில்லை. மனிதக் கரங்கள் விளையாடி உள்ளன.

முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 ஆகிய வசனங்களில் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன எனவும் கூறுகிறது.

எனவே அதை பாதுகாக்கப்பட்ட இறைவேதம் என்று நம்பாமல் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அதை வாசிக்கலாம்.

Leave a Reply