விதியை அல்லாஹ் மாற்றுவானா?
விதியை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது, அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் நீர் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூடக் காய்ந்துவிட்டது என்றார்கள். (புகாரி )
அதாவது விதி எழுதப்பட்டு விட்டது. இனிமேல் அதன்படி தான் நடக்கும், அது மாற்றப்படாது என்கிற அர்த்தத்தில் உள்ளது. ஆனால், திருமறையில் 13:39 இல், அதில் தான் நாடியதை அழிப்பான் தான் நாடியதை அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது என்று இருக்கின்றது. இந்த இரண்டும் முரண்பாடாக இருப்பது போன்று உள்ளது. எனவே ஏற்கனவே எழுதப்பட்டு சுருட்டப்பட்ட ஏட்டை மறுபடியும் இறைவன் மாற்றுவானா ?
பதில்
அல்லாஹ் எதை அழிப்பான்? எதை வைத்திருப்பான் என்பதும் தாய் ஏட்டில் இருக்கும்.
ஒருவருக்கு நோய் ஏற்படும் என்றால் அதையும் அல்லாஹ் பதிவு செய்திருப்பான. அவர் சில நல்லறங்கள் செய்வார்; அதனால் அவரது நோய் நீக்கப்படும் என்றும் அல்லாஹ் எழுதி வைத்திருப்பான்.
எதை நீக்க முடியாத வகையில் அல்லாஹ் எழுதி வைத்துள்ளானோ அதை அல்லாஹ் நீக்க மாட்டான் என்று புரிந்து கொண்டால் இதில் முரண்பாடு இல்லை.