191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?
ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவியும் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தார்கள் என்று பலரும் இந்த வசனங்களை (7:189,190) புரிந்து கொள்கின்றனர்.
இவ்வசனங்களின் துவக்கத்தில் முதல் மனிதரைப் பற்றிக் கூறப்படுவதால், "இணைகற்பித்தார்கள்" என்ற சொற்றொடர் ஆதமைத்தான் குறிக்கும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் என்பதையும், இறைத்தூதர்கள் இணைகற்பிக்க மாட்டார்கள் என்பதையும் இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் முதல் மனிதரைப் பற்றிப் பேசத் துவங்கும் இவ்வசனம் பொதுவாக மனிதர்களைக் குறிக்கும் வகையில் பன்மையாக மாறுவதையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.
பொதுவாக மனிதன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்றே இவ்வசனங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வசனங்களை அடுத்து
“நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே”
எனவே எந்த அடியாரையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கி இருக்க மாட்டார்கள். தொடர்ந்து வரும் வசனங்களையும் சேர்த்து இவ்விரு வசனங்களைக் கவனித்தால் பொதுவாக மனிதனின் போக்கு பற்றியே கூறப்படுவதை அறிந்து கொள்ளலாம்.