26. பொருத்தமில்லாத வசன எண்கள்

26.பொருத்தமில்லாத வசன எண்கள்

ச்சிடப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியில் அந்த வசனத்தின் எண்ணைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் எழுதப்பட்ட பிரதிகளிலும், அவர்களுக்குப் பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சியில் எழுதப்பட்ட பிரதிகளிலும் இவ்வாறு எண்கள் போடப்படவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் எண்களைக் குறிப்பிட்டனர்.


பல இடங்களில் ஏற்கத்தக்க வகையில் எண்கள் போடப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் பொருத்தமில்லாமலும் எண்கள் இட்டுள்ளனர்.

கருத்து முழுமை பெறாத இடங்களில் பொருத்தமில்லாமலும் வசனங்களுக்கு எண்களிட்டுள்ளனர்.

சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும்போதுதான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.

சில இடங்களில், கருத்து ஒரு வசனமாகவும், அந்தக் கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசனமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் அது புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.

பொருத்தமில்லாமல் எண்களிடப்பட்ட வசனங்களை இணைத்து நம்முடைய தமிழாக்கத்தில் மொழிபெயர்த்துள்ளோம். அதை அடையாளம் காட்டவே 26 என்ற எண்ணைக் குறிப்பிட்டுள்ளோம்.

வசனத்திற்கு எண்கள் இட்டதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதை திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் வசனங்களின் எண்கள் என்ற உட்தலைப்பில் விரிவாக விளக்கியுள்ளோம்.

Leave a Reply