440. வேறு கோள்களில் உயிரினங்கள்
பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதால் இவ்வாறு ஊகம் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று தெரிவிக்கிறது.
இவ்வசனம் (42:29) வானத்திலும், பூமியிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாகக் கூறுகிறது. பூமியைத் தவிர மற்ற கோள்களில் அல்லது துணைக் கோள்களில் உயிரினம் இருக்கின்றன என்று நிரூபிக்கப்படாவிட்டாலும் உயிரினமான வானவர்கள் வானுலகில் இருப்பதால் அதைக் குறிப்பதாக இவ்வசனத்தை எடுத்துக் கொள்ளலாம். மற்ற கோள்களில் உயிரினம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் இவ்வசனம் அதையும் உள்ளடக்கிப் பேசியுள்ளது என்று எடுத்துக் கொள்ள முடியும்