148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்

148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்

வ்வசனம் (5:103) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து மக்களிடம் காணப்பட்ட மூட நம்பிக்கையைக் கண்டித்து திருத்துகிறது.

அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காகக் கால்நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர். சில பெண் ஒட்டகங்களைத் தெய்வங்களுக்கு என விட்டு விடுவார்கள். இவ்வாறு விடப்பட்ட பெண் ஒட்டகங்களில் யாரும் பால் கறக்கக் கூடாது. இந்த ஒட்டகத்தை பஹீரா எனக் குறிப்பிடுவர்.


சில ஒட்டகங்களைத் தங்கள் தெய்வங்களுக்கென விட்டுவிடுவார்கள். அவற்றில் யாரும் ஏறிச் செல்லக்கூடாது. இத்தகைய ஒட்டகங்களை ஸாயிபா எனக் குறிப்பிடுவர்.

ஒரு தாய் ஒட்டகம் தொடர்ந்து இரண்டு பெண் ஒட்டகையை ஈன்றால் அந்தத் தாய் ஒட்டகத்தைத் தெய்வங்களுக்கென விட்டு விடுவார்கள். இதை வஸீலா எனக் குறிப்பிடுவர்.

ஒரு ஆண் ஒட்டகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண் ஒட்டகங்களைக் கருவுறச் செய்தால் அந்த ஆண் ஒட்டகத்தைத் தமது தெய்வங்களுக்கென விட்டு விடுவார்கள். இதை ஹாம் எனக் குறிப்பிடுவர்.

இவர்களின் இந்தக் கற்பனைகளைத் தான் இவ்வசனம் கண்டிக்கிறது

Leave a Reply