196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர் பத்ருப் போராகும். இப்போர் திட்டமிடாமல் நடந்ததாக இவ்வசனம் (8:42) கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக் கூட்டம் பயணிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்களை வழிமறிக்கவே புறப்பட்டார்கள்.
ஆனால் இதைக் கேள்விப்பட்டு மக்காவாசிகள் படைதிரட்டிக் கொண்டு வந்ததால் எதிர்பாராமல் பத்ருப் போரைச் சந்திக்கும் நிலைமை உருவானது. அதைத்தான் இவ்வசனம் கூறுகிறது.