308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்

308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்

லகம் அழிக்கப்படும் காலம் நெருங்கும்போது பல அதிசய நிகழ்வுகள் உலகில் ஏற்படும். அவற்றில் ஒரு அதிசயம்தான் இவ்வசனத்தில் (27:82) கூறப்படுகிறது.

இதுவரை மனிதர்கள் பார்த்திராத ஒரு உயிரினம் பூமியில் இருந்து வெளிப்படுத்தப்படும். அது மனிதர்களிடம் பேசும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

இறைவன் நிகழ்த்தும் அற்புதங்களில் இது மிகச் சாதாரணமானதாகும். ஆயினும் மனோஇச்சைப்படி திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் சிலர் இதற்கு வேறு விதமாக விளக்கம் தருகின்றனர். அதிசயப்பிராணி என்பது ரேடியோ, டேப் ரிக்கார்டர் என்று உளறுகின்றனர்.


இதற்குப் பலரும் பலவிதமான விளக்கங்களைக் கூறினாலும், மூலத்தில் இடம் பெற்றிருக்கின்ற 'தாப்பத்' என்ற சொல் உயிரினத்தைத்தான் குறிக்கும்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கியாமத் நாளின் பத்து அடையாளங்களைக் குறிக்கும்போது 'தாப்பத்' உயிரினத்தையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே பூமியிலிருந்து ஒரு உயிர்ப்பிராணியை வெளிப்படுத்துவோம் என்பது இன்றைய நவீன உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற அறிவியல் சாதனங்களைக் குறிக்காது.

Leave a Reply