316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்

316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்

வ்வசனத்தில் (58:2,3) அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்த மூட நம்பிக்கையை அல்லாஹ் கண்டித்து திருத்துகிறான்.

அன்றைய அரபுகள் மனைவியரைப் பிடிக்காதபோது "உன்னை என் தாயைப் போல கருதிவிட்டேன்'' எனக் கூறுவர். தாய் என்று சொல்லி விட்ட காரணத்தினால் மனைவியோடு குடும்ப வாழ்க்கை நடத்த மாட்டர்கள். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு இப்படிக் கூறியிருந்தாலும் அந்தச் சத்தியத்தை முறித்து விட்டு நான்கு மாதங்களுக்குள் மனைவியுடன் சேர்ந்து விட வேண்டும்.

இவ்வசனத்தில் கூறப்பட்ட பரிகாரத்தையும் செய்து விட வேண்டும் எனக்கூறி இந்த மூட நம்பிக்கையை இஸ்லாம் தகர்த்து எறிகிறது.

Leave a Reply