அத்தியாயம் : 86 அத்தாரிக்

அத்தியாயம் : 86

அத்தாரிக் – விடிவெள்ளி

மொத்த வசனங்கள் : 17

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… .

1. வானத்தின்507 மீதும், தாரிக்202 மீதும் சத்தியமாக! 379

2. தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.

4. ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.

5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான்368 என்பதைச் சிந்திக்கட்டும்.

6. குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.506

7. அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.231

8. இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.

9. அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.

10. அவனுக்கு எந்த வலிமையும் இருக்காது. எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.

11. திருப்பித் தரும்149 வானத்தின்507 மீது சத்தியமாக! 379

12. பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! 379

13. இது தெளிவான கூற்றாகும்.

14. இது கேலிக்குரியதல்ல.

15. அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர்.

16. நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்.6

17. எனவே (என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக!

 

Leave a Reply

Your email address will not be published.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit