அத்தியாயம் : 93 அல்லுஹா

அத்தியாயம் : 93

அல்லுஹா – முற்பகல்

மொத்த வசனங்கள் : 11

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. முற்பகல் மீது சத்தியமாக! 379

2. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! 379

3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.

4. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.

5. (முஹம்மதே!) உமது இறைவன் பிறகு உமக்கு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.

6. உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?

7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.81

8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.

9. எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!

10. யாசிப்பவரை விரட்டாதீர்!

11. உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!

 

Leave a Reply